பக்கம்:தமிழர் வீரம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரப் புகழ்மாலை 109 காணலாம். அடைக்கலமாக வந்தடைந்த புறாவின் உயிரைக் காக்குமாறு தன் பொன்மேனியை அரிந்திட்ட புரவலனைக் காணலாம்; மாற்றாருடைய வானக் கோட்டைகளைத் தகர்த்தெறிந்த தனிப்பெரு வேந்தனைக் காணலாம். செஞ்சொற் கவிதையால் வெஞ்சினம் தீர்ந்து சிறைபிடித்த சேரனை விடுவித்தருளிய செங்கண்ணனையும் காணலாம். பரணிக்கோர் சயங்கொண்டான் இத்தகைய சீர்மை வாய்ந்த கலிங்கத்துப்பரணி பாடிய கவிஞர் நன்னிலம் என்ற ஊருக்கு அருகேயுள்ள தீபங்குடியிற் பிறந்தவர்; செயங்கொண்டார் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்தவர்; ' கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர்; அவர் பாடிய கலிங்கத்துப் பரணியைப் பின்பற்றி ஒட்டக்கூத்தர் முதலாய கவிஞர் பரணிப்பாட்டு இசைத்தார்கள். ஆயினும், இன்றளவும் கலிங்கத்துப் பரணியே தலை சிறந்த பரணியாகக் > கற்றோரால் மதிக்கப்படுகின்றது. 'பரணிக்கோர் சயங்கொண்டான்' என்று பாராட்டப் பெற்றார் அக் கவியரசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/111&oldid=868398" இலிருந்து மீள்விக்கப்பட்டது