பக்கம்:தமிழர் வீரம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும் - தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தை யும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். "பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு நாவிற்கு அழுக்கு" என்பது அவர் கொள்கை. ஒளவையாரும் செல்வரும் புலமையுலகத்தில் ஒளவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. " ஒளவை வாக்குத் தெய்வ வாக்கு" என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயர்ல் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஒளவையார் ஒரு சிற்றுாரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, "அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக" என்று வேண்டி நின்றார். வசைப் பாட்டு அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஒளவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு தூரம். போர்க்களத்தின் அருகே அவர் போனதில்லை. ஈரமும் இரக்கமும் அவர் மனத்தை எட்டிப் பார்த்ததில்லை. இத்தகைய பதடிகள் பாட்டுப் பெற ஆசைப்பட்டது கண்டு ஒளவையார் உள்ளத்துள்ளே நகைத்தார்; அருகே நின்ற இருவரையும் குறுநகையுடன் நோக்கி, "செல்வச் சேய்களே ! என் பாட்டு வேண்டும் என்று கேட்கின்றீர்களே ! உம்மை நான் எப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/112&oldid=868400" இலிருந்து மீள்விக்கப்பட்டது