பக்கம்:தமிழர் வீரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் படைத்திறம் 45 அறப்போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தவன் அவன். யானைப்படை அவனிடம் சிறந்து விளங்கிற்று. ' கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாம் தவிர்த்த பெருவழுதி” என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் அவனை வியந்துரைக்கின்றன. பாண்டி நாட்டு மீனக் கொடி அவன் பட்டத்து யானையின்மீது பெருமிதமாக நிமிர்ந்து பறந்த காட்சியைக் கண்ட கவிஞர் ஒருவர், " கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய" என்று மன மகிழ்ந்து வாழ்த்தினார்: வேளைப் படை கண்ணினைக் காக்கும் இமைபோல அரசற்குக் காலத்தில் உதவி புரியும் வீரரும் முற்காலத்தில் இருந்தனர்; அன்னார் அணுக்கப் படையினர்; உற்றவிடத்து உயிர் வழங்கும் பெற்றியர். உடுக்கையிழந்தவன் கை போல் இடுக்கண் வந்த வேளையில் ஏன்று உதவிய அவ்வீரர் " வேளைக்காரர்' என்று அழைக்கப் பெற்றார். தஞ்சைச் சோழ மன்னர் சேனையில் வேளைக்காரப் பட்டாளம் ஒன்று சிறந்து விளங்கிற்று. ஒளவை கண்ட வீரன் பழங்காலத்திலும் இத்தகைய வேளைப்படை வீரர் இருந்தனர் என்பது ஒளவையார் பாட்டால் விளங்கு கின்றது. ஒரு நாள் ஒர் அரசனைக் காணச் சென்றார் 4. வேள்விக்குடிச் செப்பேடுகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே வரையப்பெற்றன. 5. புறநானூறு, 9. நெட்டிமையார் பாட்டு. 6. ஆபத்து வேளையில் அஞ்சல் என்று அருள் புரியும் முருகவேளை ' வேளைக்காரப் பெருமாள்" என்றார். அருணகிரிநாதர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/17&oldid=868415" இலிருந்து மீள்விக்கப்பட்டது