பக்கம்:தமிழர் வீரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 தமிழர் வீரம் ஒளவையார். மது நிறைந்த பொற்கிண்ணம் அவன் முன்னே நின்றது. அங்கு முறுக்கு மீசையோடு மெய்காப்பாளனாக நின்றான் ஒரு சேவகன். அவன் முகத்தை ஒளவையார் அமர்ந்து நோக்கினார்; அவன் ஊரும் பேரும் கேட்டறிந்தார் முகமலர்ந்தார்: ஆர்வத்தோடு பேசலுற்றார்: ‘அரசே! இவன் பிறந்த குடியின் பெருமையை மூன்று தலைமுறையாக நான் அறிவேன். ஒரு போர் முனையில் உன் பாட்டன் பெரும் போர் புரிந்துகொண்டிருந்தான். அவன் வில்லினின்றும் போந்த அம்புகள் மாற்றார் சேனையைச் சின்னபின்னமாக்கின. அவ்வில்லின் செயல் கண்டு விம்மிதம்கொண்டு நின்றான் உன் ஐயன். அப்போது பகைவன் ஒருவன் விலாப் புறமாக நின்று வீசிய வேற்படை அவனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. அதனை அவன் அறிந்தானில்லை. நொடிப்பொழுதில் வேற்படைக்கும் அவனுக்கும் இடையே ஒரு வீரன் வந்து நின்றான், வெம்படையைத் தன் மார்பில் ஏற்றான்; மடிந்து மண்மேல் விழுந்தான். அவனைத் தழுவி எடுத்தான் உன் பாட்டன், கடும் புண்னைக் கண்ணிராற் கழுவினான்; அவன் விழுந்து பட்ட இடத்தில் வீரக் கல் நாட்டினான். 'அவ் வீரனுடைய பேரன் இவன். அந்த முறையில் அவன் பெயரே இவன் பெயர். அமர்க்களத்தில் இவனும் அருஞ் செயல் புரிய வல்லான், உனக்காக உயிரையும் கொடுப்பான். தியாகம் இவன் பிறவிக்குணம். ஆதலால் இக் கிண்ணத்திலுள்ள மதுவை முதலில் இவனுக்கே கொடு” என்று கூறினார். அது கேட்ட அரசன் மனமகிழ்ந்து ஒளவையார் பணித்தவாறே செய்தான்." 7. " புரந்தார்கண் ணிர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரத்துகோட் டக்க துடைத்து" என்ற திருக்குறள் ஈண்டுக் கருதத் தக்கது. 8. புறநானூறு, 290.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/18&oldid=868417" இலிருந்து மீள்விக்கப்பட்டது