பக்கம்:தமிழர் வீரம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் படைத்திறம் #9 ஆயர்களும் இன்புறும் வண்ணம் பசுக்களை மீட்டுத் தந்த சீவகனை, " வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல் " என்று அக் காவியம் வியந்து புகழ்கின்றது. முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடையே வட்டுடையாகும்.' விற்படையில் கைதேர்ந்த வீரர் தேர்ந்த வில்லிகள்' என்று பெயர் பெற்றனர். வீர முரசு தமிழ் நாட்டு முடி மன்னர்க்கு மூன்று முரசம் உண்டு; ஒன்று நீதி முரசு மற்றொன்று கொடை முரசு, இன்னொன்று படை முரசு, செம்மையின் சின்னம் நீதி முரசம், வண்மையின் சின்னம் கொடை முரசம்; ஆண்மையின் சின்னம் படை முரசம், வெம்மை வாய்ந்த புலியை வீறுடன் தாக்கிக் கொம்பினால் பீறிக்கொன்ற பெருங்காளையின் தோலாற் செய்யப்படுவது வீரமுரசம் போர் ஒடுங்கிய காலங்களில் அஃது அரண்மனையில் ஒரு மணி மஞ்சத்தில் வீற்றிருக்கும். மன்னன் படையெடுக்கும் பொழுது அம் முரசம் மாளிகையினின்று எழுந்து முன்னே செல்லும். இசைக் கருவிகள் போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள். அவற்றின் பெயர்கள் ஒலிக்குறிப்பால் அமைந் 11. சீவக சிந்தாமணி, 468. "வட்டுடை- முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை விசேடம்” என்றார் நச்சினார்க்கினியர். 12. போர்க்களத்தில் முழங்கும் கருவிகளை ஒரு பாட்டில் தொகுத்துரைத்தார் வில்லி. அதனை வில்லி பாரதம், பதினேழாம் போர்ச் சருக்கத்திற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/21&oldid=868424" இலிருந்து மீள்விக்கப்பட்டது