பக்கம்:தமிழர் வீரம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழர் வீரம் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை, முர்முர் என்று ஒலிப்பது முருடு, கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும் போர் வெறி பிறக்கும்; வீரம் சிறக்கும். மறவர் மனத்திண்மை வாய்ந்த வீரரை மறவர் என்று அழைத்தனர் பழந் தமிழர். அவர் கல்லெனத் திரண்ட தோளர்; கட்டமைந்த மேனியர்; முறுக்கு மீசையர் தருக்கு மொழியினர்; வீறிய நடையினர்; சீறிய விழியினர். " புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழி.எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்." பேராண்மை போர்க்களத்தில் முன் வைத்த காலைப் பின் வைத்தலறியாத மறவரே சுத்த வீரர். தம்மை நோக்கி வரும் படைக்கலத்தைத் துச்சமாகக் கருதுவது அவர் இயற்கை. படைக்கலம் வரும் போது விழித்த கண் இமைத்தல் அா' வீரத்திற்கு இழுக்கு" அன்னார் மாற்றாரது படைக்கலத்தாற் பெற்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் மேலாகப் 13. புறநானூறு, 182. 14. " விழித்தகண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு" என்றார் திரு வள்ளுவர். பகைவர் எறிந்த வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணிமைத்தல் தோல்வி யாகும் என்பது இக்குறளின் கருத்து. தமிழ்நாட்டுச் சிறுவர் ஆடும் விளையாட்டில் இக் கருத்தை இன்றும் காணலாம். "எனக்குப் பயப்படுவாயா, மாட்டாயா" என்று ஒருவன் கேட்பான். " பயப்பட மாட்டேன்" என்று மற்றவன் சொல்வான். ' அப்படியானால் கண்ணை விழித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/22&oldid=868426" இலிருந்து மீள்விக்கப்பட்டது