பக்கம்:தமிழர் வீரம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழர் வீரம் அமைந்தவள் கொற்றவை. பழமைக்குப் பழமையாய்த் திகழ்பவள் அவளே. தமிழகத்திற் படை வீடுகொண்டு அருள் புரியும் வீர முருகனை ஈன்ற தாய் அவளே. அரந்தை கெடுத்து வரம் தரும் திறம் வாய்ந்தவள் அவளே. 21. திருமுருகாற்றுப்படை, முருகனை "வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவன்" என்றும், " பழையோள் குழவி' என்றும் குறிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/26&oldid=868434" இலிருந்து மீள்விக்கப்பட்டது