பக்கம்:தமிழர் வீரம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழர் வீரம் என்று வஞ்சினம் கூறினான்; போர்க்கோலங்கொண்டு எழுந்தான். தலையாலங்கானப் போர் தலையாலங்கானத்தில் மாற்றாரைத் தாக்கினான், வாகை மாலை சூடினான். ' தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று தமிழகம் அவனைப் பாராட்டி மகிழ்ந்தது. 4. " சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படே எனாயின் பொருந்திய என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக" புறநானூறு, 72. 5. "தலையாலங்கானத்தில் தன்னொக்கும் இரு வேந்தரைக் கொலை வாளில் தலை துமித்து" என்று கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்னமனூர்ச் செப்பேடுகளில் இச் செய்தி கூறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/30&oldid=868447" இலிருந்து மீள்விக்கப்பட்டது