பக்கம்:தமிழர் வீரம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மான வீரம் மானங் காத்தான் மானமே உயிரினும் சிறந்ததென்பது தமிழ்நாட்டார் கொள்கை " மானங் கெடவரின் வாழாமை முன் இனிதே' என்றார் ஒரு தமிழ்ப் புலவர். எனவே, மானங் காத்த வீரனை மனமாரப் போற்றும் வழக்கம் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் உண்டு. நாட்டின் மானத்தைக் காத்தருளிய வீரன் ஒருவனுக்கு " மானங் காத்தான்” என்ற பட்டம் சூட்டிய நாடு தமிழ் நாடு. அவன் பெயரைத் தாங்கிய ஊர்கள் இன்றும் பாண்டி நாட்டில் நின்று நிலவுகின்றன: விழுப்புண் புறப்புண் போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் புண்பட்ட வீரனை எல்லோரும் போற்றுவர்; விழுப் புண் பெற்றான் என்று வியந்து பேசுவர்; வீரக்கல் நாட்டி வணக்கம் செலுத்துவர். ஆனால், புறத்திலே புண்பட்ட வீரனை எல்லோரும் இகழ்வர்; போர்க்களத்தில் புறங்காட்டி ஒடியதற்கு அடையாளமாகிய அப்புண்னை ப் பார்க்குந்தோறும் பழித்தும் இழித்தும் பேசுவர். ஆதலால் மான வீரர் ஒருபோதும் புறப் புண் தாங்கி உயிர் வாழ இசையார். 1. இராமநாதபுரம் ஜில்லா, அருப்புக்கோட்டைத் தாலுகாவில் மானங்காத்தான் என்னும் ஊர் உள்ளது. 2. "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து" ... விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்ட புண் என்று உரைத்தார், பரிமேலழகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/31&oldid=868449" இலிருந்து மீள்விக்கப்பட்டது