பக்கம்:தமிழர் வீரம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழர் வீரம் புறப்புண் பட்ட சேரலாதன் பெருஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன் வரலாறு இவ்வுண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். வெண்ணிப் போர்க்களத்தில் புறப்புண் பட்டதாக எண்ணினான் சேரன் அப்போதே உயிரை வெறுத்தான் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுத்தான். சேரனுக்குப் பாராட்டு அப் போர் நிகழ்ந்த ஊரிலே ஒரு பெண்மணி விளங்கினாள். அவள் குயக் குலத்திற் பிறந்தவள்; கவிபாடும் திறம் பெற்றவள். போர்க்களத்தைக் கண்ணாற் கண்ட அம் மாது இருவகையில் இன்பம் உற்றாள். தன் நாட்டரசன் - திருமாவளவன் - வெற்றி பெற்றான் என்றறிந்த நிலையிற் பிறந்த இன்பம் ஒரு வகை. செருக்களத்தில் தோற்று ஓடிய சேரலாதன் மான வீரனாய் வடக்கிருந்து மாண்டான் என்று கேள்வியுற்றபோது பெற்ற இன்பம் மற்றொரு வகை. வாகை சூடிய வளவனை நோக்கி, “அரசே, வெண்ணிப் போர்க்களத்தில் மாற்றார்மீது சாடினாய்; வெற்றிமாலை சூடினாய் வல்லவன் நீயே, ஆயினும் மானம் பொறாது உயிர் துறந்த சேரன் நின்னினும் நல்லவன்" என்று பாடினாள்: எனவே வளவனது வீரத்தை வியந்து பாராட்டிய தமிழ் உலகம் சேரன் மானத்தையும் மதித்துப் புகழ்ந்த தென்பது மானங் காத்த சாமந்தர் இரு வீரர் ஆபத்து வேளையில் மாநில மன்னர்க்கு நேர்ந்த மானங்காத்து, மாயாப் புகழ் பெற்ற சிற்றரசரும் தமிழ் 3. " களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்ததின் ஆற்றல் தோன்ற வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே புறப்புண் நாணி வடக்கிருந் தோனே' - புறநானூறு, 66.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/32&oldid=868451" இலிருந்து மீள்விக்கப்பட்டது