பக்கம்:தமிழர் வீரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 தமிழர் வீரம் சோழிய வீரர் அப் படையில் சேர்ந்தார்கள். உறந்தையின் அருகே கண்ணன் சேனைக்கும் மாற்றார் சேனைக்கும் கடும்போர் நிகழ்ந்தது. பகையரசர் மனத்திட்பம் இழந்தனர்; பறித்த பொருளையெல்லாம் போர்க்களத்திற் போட்டு ஒட்டம் பிடித்தனர். பாராட்டும் பட்டமும் வெற்றிபெற்ற கண்ணன், வளவனை உறையூருக்கு அழைத்து வந்தான் அரியாசனத்தில் அமர்த்தினான். மழை முகங் காணாத பயிர்போல் வாடியிருந்த குடிகள் எல்லாம் அரசன் வருகையால் இன்புற்று மகிழ்ந்தார்கள். மானங்காத்தான் மலையமான் திருக்கண்ணன் என்று பாராட்டினர் மாந்தரெல்லாம். ஆபத்துக் காலத்தில் அடைக்கலம் தந்து, அரசையும் மீட்டுக் கொடுத்த கண்ணனை மனமாரப் புகழ்ந்து ஏனாதிப் பட்டம் அளித்தான் வளவன். அன்றுமுதல் "மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்' என்று தமிழ் நாடு அவனைப் புகழ்வதாயிற்று: பல்லவர்கோன் - நந்தி பல்லவகுல மன்னனாகிய நந்திவர்மன் காஞ்சி மாநகரில் அரசு புரிந்தான். அவனுக்குப் பகைவர் பலராயினர். ஆயினும் படைத் திறமும் பண்பாடும் வாய்ந்த உதயசந்திரன் என்ற சாமந்தன் உற்ற துணைவனாக அமைந்தமையால் நந்திமன்னன் கவலையற்றிருந்தான். கும்பகோணத்திற்கு அருகே இப்போது நாதன் கோயில் என வழங்கும் ஊர் அப்போது பல்லவ நகரமாகச் சிறந்து விளங்கிற்று. நந்திபுரம் என்பது அதன் பழம் பெயர். 4. "எள்ளறு சிறப்பின் முள்ளுர் மீமிசை அருவழி யிருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந !” - புறநானூறு, 174.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/34&oldid=868455" இலிருந்து மீள்விக்கப்பட்டது