பக்கம்:தமிழர் வீரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழர் வீரம் - யானைகள் திண்ணிய மரங்களைத் துதிக்கையால் எடுத்து நெடிய மதில்களை இடித்தன. எவ்வகைப் பண்டமும் கோட்டையின் உள்ளே செல்லாதபடி காலாட்படைகள், கண்ணும் கருத்துமாய்க் காவல் புரிந்தன. சில நாளில் கோட்டை இடிந்தது. உள்ளேயிருந்த புலிகேசனது மறப்படை கடுமையாக எதிர்த்தது. ஆயினும் மடைதிறந்த கடல்போல் தமிழ்ச் சேனை கோட்டையின் உள்ளே புகுந்து மாற்றாரைத் தாக்கி வென்றது. புலிகேசனும் போர்க்களத்தில் விழுந்துபட்டான். பரஞ்சோதியார் வெற்றி தலைவனை இழந்த சேனை தள்ளாடத் தொடங்கிற்று அதனை வளைத்துப் பற்றுமாறு பரஞ்சோதியின் ஆணை பிறந்தது. புலிகேசன் முப்பதாண்டுகளாகத் திரட்டி வைத்திருந்த பொன்னும் மணியும் பரஞ்சோதியார்க்கு உரியவாயின. அவற்றைக்கொண்டு அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார். "பன்மணியும் நிதிக்குவையும் கேட்டினமும் பரித்தொகையும் இன்னனண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்" என்று அவர் வரலாறு கூறுகின்றது. . நரசிம்மன் மனமகிழ்ந்தான்; நெடும்பகை தொலைத்த பரஞ்சோதியை மனமாரப் புகழ்ந்தான். வாதாபி நகரத்தில் வெற்றித் துண் நாட்டினான்; ' வாதாபி கொண்ட நரசிம்மன் என்ற விருதுப் பெயர் பூண்டான். அது முதல் பன்னிராண்டு சாளுக்கிய நாடு அரசிழந்து அவலமாய்க் கிடந்ததென்றால் பரஞ்சோதியின் படைத்திறமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? . 3. சிறுத்தொண்டர் புராணம், 6. 4. காஞ்சிப் பல்லவர் சரித்திரம், 98.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/38&oldid=868463" இலிருந்து மீள்விக்கப்பட்டது