பக்கம்:தமிழர் வீரம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழர் வீரம் ೨೩674- பணிந்தார்கள். அந்நிலையில் வடகலிங்க நாட்டு அரசன் இருமுறை திறை செலுத்தத் தவறினான் என்பதை அறிந்தான் மன்னர் மன்னன்; உடனே படைத்தலைவரை நோக்கி, "வடகவிங்கன் வலிமையற்றவன் ஆயினும் அவன் நாட்டு மலையரண் வலிமை சான்றது. நமது படை இன்றே எழுந்து அக்குன்றுக் கோட்டையை இடித்துக் கலிங்கன்ை யும் பிடித்து வருக" எனப் பணித்தான். படைத்தலைவன்-கருணாகரன் அப் பணி தலைமேற்கொண்டான் கருணாகரன் என்னும் தானைத் தலைவன். அவன் பல்லவ குலத்துதித்த பெருவீரன், வண்டையர் கோமகன்; தொண்டைமான் என்ற பட்டம் பெற்றவன். அவன் தலைமையில் எழுந்தது தமிழ்ப் பெருஞ்சேனை; பல ஊரும் ஆறும் கடந்து கலிங்க நாட்டிற் புகுந்தது சேனை சென்ற இடமெல்லாம் மதில் இடிந்தது; புகை எழுந்தது; பொழில் அழிந்தது; படை படையென்று குடிகள் பதறி ஓடினர்; " ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர் அருவர் அருவர்என அஞ்சி" அரசனிடம் சென்று முறையிட்டனர். கலிங்கப் போர் அது கேட்ட அரசன் ஆவேசமுற்று எழுந்தான்; " குலோத்துங்கனுக்கு நான் எளியனேயாயினும் அவன் படைக்கு இளைத்தவனோ?” என்று கூறி நகைத்தான்; " என்னுடைய தோள்வலியும் வாள்வலியும் அறியாது இங்கு அமைந்த கடலரணும் கருதாது எழுந்த சேனையை இன்னே பொருதழிப்பேன்" என்று புறப்பட்டான். கலிங்கப்படை திரண்டு எழுந்தது; தமிழ்ச் சேனையை எதிர்த்தது. செருக்களம் செங்களமாயிற்று. படையின் 5. பாலாறு முதலாகக் கோதமை ஈறாகப் பதின்மூன்று நதிகளைக் கடந்து சென்றது அச்சேனை. . கலிங்கத்துப் பரணி, 367-369 தாழிசைகளில் விவரம் காண்க. 6. பெருந்தொகை, 803.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/40&oldid=868469" இலிருந்து மீள்விக்கப்பட்டது