பக்கம்:தமிழர் வீரம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலாண்ட காவலர் 45 ஆகாய விமானம் ஆகாய விமானமும் தமிழ் இலக்கியத்திலே குறிக்கப்படுகின்றது. விமானத்தை வானஊர்தி என்றும், அதனைச் செலுத்தும் பாகனை வலவன் என்றும் அழைத்தனர் பழந் தமிழர் காட்சிக்கினிய மயில் வடிவத்தில் அமைந்த ஒரு விமானத்தின் மாட்சியைச் சிந்தாமணி கூறுகின்றது. அதன் விசையை வலப்புறமாகக் கைவிரலால் அசைத்தால் விமானம் கிளர்ந்தெழுந்து பறக்கும்; மேக மண்டலத்துக்கு மேலும் செல்லும்; இடப்புறமாக அசைத்தால் கால் குவித்து இறங்கித் தரையிலே நிற்கும்." இத்தகைய விமானத்தை இயக்கக் கற்றிருந்தாள் ஒரு மங்கை அவள் கணவன் ஒர் அரசன். அவனைத் தாக்கினார் பகைவர். கருவுற்றிருந்த அரசியை மயில் விமானத்தில் ஏற்றி வெளியேற்றினான் மன்னன். கணவன் கருத்தை மறுக்க மாட்டர்மல் அப் பொறியை இயக்கினாள் அப் பாவை. அவள் கரம் விசையில் இருந்தாலும் மனம் கணவனையே நோக்கிற்று. மயில் முன்னே இழுக்க, மனம் பின்னே இழுக்க, ஒருவாறு பறந்து கொண்டிருந்தாள் அவள். அந்நிலையில் பகைவரது வெற்றி முரசம் அதிர்ந்தது. மங்கை கலங்கினாள்: கை சோர்ந்தாள். இயக்கமிழந்த விமானம் கீழ்நோக்கிச் சென்றது; ஒரு மயானத்தில் விழுந்தது. அதிர்ச்சியால் மயக்கமுற்றுக் கிடந்த மாதரசி அங்கு ஒர் ஆண் மகவைப் பெற்றாள். அவனே சீவகன், சிந்தாமணியின் கதாநாயகன். தூங்கெயில் ஆகாயத்தில் பறந்து செல்லும் கோட்டை போன்ற பெரிய விமானமும் அந்நாளில் இருந்ததாகத் தெரிகின்றது. 8. சிந்தாமணி, நாமகள் இலம்பகம், 235.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/47&oldid=868483" இலிருந்து மீள்விக்கப்பட்டது