பக்கம்:தமிழர் வீரம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழர் வீரம் துரங்கெயில் என்பது அதன் பெயர் தூங்கெயில் ஊர்ந்து துயர் விளைத்த கொடும் பகைவரை வென்றான் ஒரு சோழ மன்னன்; அவரது ஆகாயக் கோட்டையைத் தகர்த் தெறிந்தான்; ' துரங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” என்று தமிழகம் அவனை வியந்து புகழ்ந்தது." எப் படையால் அவன் ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பது இப்பொழுது தெரியவில்லை. எனினும், புலவர் பாடும் புகழுடைய பழந்தமிழ் வேந்தருள் அவன் தலைசிறந்தவன் என்பதில் ஐயமில்லை. 9. தூங்கெயில் என்பதற்கு நேரான ஆங்கிலச் சொல் Flying fortress என்பதாகும். சென்ற பெரும் போரில் அது கையாளப்பட்டது. 10. " துரங்கெயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்” - சிறுபாணாற்றுப்படை, 80-81.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/48&oldid=868485" இலிருந்து மீள்விக்கப்பட்டது