பக்கம்:தமிழர் வீரம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ்நாட்டுக் கோட்டைகள் அரண்மனை நாட்டைக் காப்பவன் அரசன், அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரனுடைய மனையே அரண்மனையாகும். தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஒர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. மாளிகையைச் சூழ்ந்து நின்றது. நெடுமதில், பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை மறித்துத் தள்ளும் இருப்புக் கவை தானே வளைந்து சரமாரி பொழியும் யந்திர வில் உருக்கிய செம்பையும் இரும்பையும் மாற்றார் மீது வார்க்கும் உலைப்பொறி, பற்றிய பகைவர் கரங்களைப் பொதிர்க்கும் ஊசிப்பொறி, கழுத்தை முறுக்கும் இரும்புத் தொடர்; இன்னும் புலி, யானை, பன்றி, பாம்பு இவற்றின் வடிவத்தில் அமைந்த பொறிகள்; இவற்றை யெல்லாம் கொண்டு விளங்கிற்று மதுரைக் கோட்டை மலை அரண் செங்குத்தாக எழுந்த மலைகளைச் சிறந்த இயற்கை அரணாகக் கொண்டனர் பண்டைக் குறுநில மன்னர். குன்றுகளிற் கோட்டை கட்டி அவர் ஆட்சி புரிந்தனர். 1. சிலப்பதிகாரம் - அடைக்கலக் காதை, 207-215.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/49&oldid=868487" இலிருந்து மீள்விக்கப்பட்டது