பக்கம்:தமிழர் வீரம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழர் வீரம் பாண்டி நாட்டிலே பறம்புக் கோட்டை கொங்கு நாட்டில் கொல்லிக் கோட்டை சோழ நாட்டில் செஞ்சிக் கோட்டை இவை முற்காலத்தில் சிறந்து விளங்கின. பறம்பும் பாரியும் பாண்டி நாட்டிலே பறம்பு மலையை ஆண்டான் பாரி என்ற சிற்றரசன். அவன் வேளிர் குலதிலகன்; ஆண்மையும் அருளும் வாய்ந்தவன். அங்க நாட்டு அரசனாகிய கர்ணனும் பறம்பு நாட்டுத் தலைவனாகிய பாரியும் கொடைக்கு வரம்பாகத் தமிழ் இலக்கியத்திற் குறிக்கப்படுகின்றனர். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்து எல்லையற்ற புகழெய்திய பாரியைத் தேவாரமும் விதந்து பாடிற்று: மூவேந்தர் முற்றுகை பாரியின் புகழை அறிந்து எரிவுற்றனர் பெருநில மன்னர். சேர சோழ பாண்டியராகிய மூவரும் ஒன்று சேர்ந்தனர்; பெரும் படை திரட்டினர்; பறம்பு மலையை முற்றுகையிட்டனர்; சில நாளில் பாரி சரணமடைவான் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மலைக்கோட்டையில் அவன் வாட்டமின்றி இருந்தான். கழைநெல்லும் பலாக்கனியும் கிழங்கும் தேனும் குறைவறத் தந்தது அக்குன்றம். கபிலர் பரிகாசம் பலநாள் முற்றுகையிட்டனர் பகைவேந்தர், பறம்புக் கோட்டையின் திறங்கண்டு மனந்தளர்ந்தனர். அப்போது பாரியுடன் இருந்த கபிலர் என்ற கவிஞர் ஒரு பாட்டிசைத்தார். " மாநில மன்னரே ! இம் மலையடி வாரத்தில் உள்ள மரந்தொறும் உமது மதயானையைக் கட்டினாலும், பரந்த வெளியெங்கும் தேர்ப்படையை நிரப்பினாலும் உம்மால் வெற்றி பெற முடியாது. பறம்பு மலையைப் பெறுதற்குரிய வழியை யான் அறிவேன். உங்கள் 2. "கொடுக்கி லாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" - சுந்தரமூர்த்தி தேவாரம், திருப்புகலூர்ப் பதிகம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/50&oldid=868491" இலிருந்து மீள்விக்கப்பட்டது