பக்கம்:தமிழர் வீரம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழர் வீரம் -ജ്ജ്, கொல்லிமலைக் கோட்டை சேலம் நாட்டிலே கொல்லி என்னும் மலையொன் றுண்டு. அது முன்னாளில் சேரகுல மன்னருக்கு உரியதாயிருந்தது. வளமார்ந்த அம் மலைச் சோல்ையில், எப்போதும் செந்தேன் துளிக்கும்; செழும்பலாப் பழுக்கும், ஈசன் அருள் விளங்கும் அறைப்பள்ளியென்னும் திருக் கோயிலும், தீயவரை மருட்டியழிக்கும் தெய்வப் பாவையும் அம்மலையிலே உண்டு. வில்லாளன் ஓரி இத்தகைய கொல்லி மலையிலே குறுநில மன்னனாக வாழ்ந்தான் ஒரி என்று பெயர் பெற்ற வீரன். வில்லாண்மையில் அவன் நிகரற்றவன். முடிவேந்தரும் அவனுதவியை நாடினர். அமர்க்களங்களில் அவன் வில்லால் மடிந்த வீரர் எண்ணிறந்தவர். காற்றின் வேகமும், கனலின் வெம்மையும் வாய்ந்த அம்புமாரி பொழிந்த அவ் வில்லை "வல்வில்" என்று எல்லோரும் புகழ்ந்தனர். ஒரியின் வேட்டை போர் ஒழிந்த காலத்தில், அவ்வீரன் வேட்டையாடிப் பொழுது போக்குவான். அவ் வேட்டைகளில் ஒன்று பாட்டில் அமையும் பேறு பெற்றது. ஒரு நாள் வல்வில் லெடுத்துத் தன்னந் தனியனாய்க் கொடிய விலங்குகள் திரியும் கொல்லிமலைக் காட்டினுள்ளே சென்றான் ஓரி, பெரிய யானையொன்று அவன் கண்னெதிர்ப்பட்டது. உடனே வல்வில் வளைந்தது; அடுகணை எழுந்தது; வேழத்தின் தலையில் வேகமாய்ப் பாய்ந்து வெளிப்பட்டது; பின்னும் விசை குன்றாமல் சென்று குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றது; அதனையும் கடந்து ஒரு கலைமான் மீது பாய்ந்தது; மேலும் சென்று காட்டுப் பன்றியொன்றை வீட்டியது; அம்மட்டிலும் அமையாது. புற்றிலே இருந்த ஓர் உடும்பின்மேற் பாய்ந்து சினம் தீர்ந்தது: 5. புறநானூறு, 152.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/52&oldid=868496" இலிருந்து மீள்விக்கப்பட்டது