பக்கம்:தமிழர் வீரம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டுக் கோட்டைகள் 51 பாணர் வியப்பும் திகைப்பும் அவ் வேட்டையைக் கண்டது ஒரு பாணர் கூட்டம்: வியப்பும் திகைப்பும் உற்றது: "கொல்லிமலையில் இப்படிக் கொலை புரிந்தவன் யாவன்?" என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டது. "இவன் விளையாட்டின் பொருட்டு வேட்டையாடும் வீரனா? அன்றி விலைப்பொருட்டால் விலங்குகளைக் கொலை செய்யும் வேடனா?” என்று ஒருவரையொருவர் வினவி நின்றார். ஒரியின் தோற்றம் அப்போது வில்லாளன் அவர் நின்ற பக்கம் திரும்பினான். அவனுடைய ஏற்றமும் தோற்றமும் அவர் கண்களைக் கவர்ந்தன. வண்ண மேனி, திண்ணிய தோள்; நறுஞ் சாந்தம் பூசிய பரந்த மார்பு நெடிய கை கொடிய வில்; கழல் அணிந்த கால், ஏறு போன்ற நடை - இவற்றைக் கண்டனர் பானர்; கொல்லிமலை யாளும் கொற்றவன் இவன்தானோ ! என்று எண்ணினர். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததோ!' என்று வியந்து நின்றார். இசையரங்கு அந்நிலையில் பானரிடையே ஆர்வம் பெருகிற்று. முழவும் சிறுபறையும் முழங்கின. இசைத்தழும்பேறிய கைகள் தாளமிட்டன. பாணர் தலைவன் பண்ணொடு ஒரு வண்ணம் பாடினான். கொல்லிமலைச் சாரல் ஒரு நல்லிசை அரங்கமாயிற்று. இசைப் பாட்டை ஆர்வத்தோடு கேட்டு மனம் தழைத்தான், வில்லின் செல்வன். 'நல்லிசையாளும் கொல்லிக் கோவே என்று எடுத்து இசைப்பாட்டைப் பாடி முடித்தான் பாணப் புலவன். தன் பெயரைக் கேட்ட நிலையில் நாணித் தலை கவிழ்ந்தான் வீரன், பாடிய பாணர் பசி தீர, ஊன் கலந்த சோறும் உயர்ந்த மதுவும் அளித்தான்; நல்ல பொன்னும் மணியும் பரிசாகக் கொடுத்தான். ஒரியின் புகழ் படைத்திறமும் கொடைத்திறமும் வாய்ந்த வல்வில் ஒரியைப் பாராட்டிப் பாடினார், வன்பரணர். அவரது பாட்டின் சுவையறிந்து மகிழ்ந்தது பழந்தமிழ் உலகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/53&oldid=868497" இலிருந்து மீள்விக்கப்பட்டது