பக்கம்:தமிழர் வீரம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பெண்ணை நாட்டுப் பெருவீரர் மலையமான் நாடு தமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம் வலிமை சான்ற முள்ளுர்க் கானம் அதன் கோட்டை காரியும் குதிரையும் மலையமான் குலத்திலே தோன்றினான் காரி. அவன் திகரற்ற குதிரை வீரன். அவன் குதிரைக்கும் காரி என்பது பெயர். அக் குதிரையின் திறமையால் பெரும் போர்களில் வெற்றி பெற்றான் காரி வீரன். அவன் உதவியை நாடினர் முடிமன்னர் மூவரும் போர்க்களத்தை நோக்கி அவன் குதிரையின்மேற் செல்லும்போது மண் நடுங்கும்; மாற்றார் மனம் ஒடுங்கும். ஒரியும் காரியும் கொல்லிமலை வீரனாகிய ஒரிக்கும், மலையமான் காரிக்கும் இடையே நாளடைவில் கடும்பகை மூண்டது; இறுதியில் போர் நிகழ்ந்தது போர்க்களத்தில் ஒரியைக் 1. திருக்கோவலூர் இப்போது திருக்கோயிலூர் என வழங்கும். 2. புறநானூறு, 122. 3. சிறுபாணாற்றுப்படை, 10 -11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/64&oldid=868510" இலிருந்து மீள்விக்கப்பட்டது