பக்கம்:தமிழர் வீரம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழர் வீரம் திருமுடிக்காரி என்றும் வாடாத தமிழ்மாலை பெற்ற வள்ளல்களில் ஒருவன் திருமுடிக்காரி. பொய்யறியாக் கபிலர் அப்பெருந்தகையைப் புகழ்ந்து பாடினார். " கபிலர் பாடிய காரியை நாம் பாடுதல் எளிதோ" என்று கருத்தழிந்து நின்ற கவிஞர் பலர். அன்னவருள் ஒருவர் நப்பசலையார் என்னும் மெல்வியலார்' எனவே புலவர் பாடும் புகழுடையவன் திருமுடிக்காரி. பெண்ணை நாட்டுக்குப் பெருமையளித்தவன் திருமுடிக்காரி. வீர சுதந்தர வேட்கையின் சின்னமாக விளங்கியவன் திருமுடிக்காரி' வாணர்குல வீரம் மகத நாடு தமிழ் நாட்டில் வானர் என்னும் பெயர்பெற்ற குறுநில மன்னர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள். பெண்ணையாறு பாயும் நடு நாட்டின் ஒரு பகுதி அவர் ஆட்சியில் அமைந்த நாடு. அதற்கு மகத நாடு என்ற மறு பெயரும் உண்டு. அதனால் வாணர்குல மன்னனை மாகதர்கோன் என்றும், மகதேசன் என்றும் தமிழ்ப் பாவலர் புகழ்ந்துரைப்பாராயினர்." வாணர்குலப் பெருமை தமிழ் நாட்டு முடிவேந்தரும் பெண்கொள்ளும் பெருமை சான்றது வாணர் குலம். கிள்ளி வளவன் என்ற 4. " புலன்அழுக் கற்ற அந்த னாளன் இரந்துசெல் மாக்கட்கு இனியிடன் இன்றிப் பரந்துஇசை நிற்கப் பாடினன்" - நப்பசலையார் பாட்டு, புறநானூறு, 126 5. இவ் வரலாறு கனகசபைப் பிள்ளை எழுதிய &@#ong; gogsflugu. The Tamils. Eighteen Hundred Years Ago, p. 103. 5. பெருந்தொகை, 158, 159.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/66&oldid=868512" இலிருந்து மீள்விக்கப்பட்டது