பக்கம்:தமிழர் வீரம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தமிழர் வீரம் என்று சொல்லிப் புறப்பட்டான் பாணன் வாணன் வழக்கம்போல் நண்பனை அன்புடன் வரவேற்றான்; "உனது குறையை அறிந்து கொண்டேன்; இதோ வருகிறேன்" என்று வெளியே சென்றான். சிறிது நேரத்தில் வந்தது ஒரு யானை வாணன் அதைப் பாணன் முன்னே நிறுத்தி ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். வாணன் " கிருது உடனே பாணனுக்கு விளங்கிற்று. புன்னகை பூத்த அவன் முகத்தை நோக்கி, "அண்ணலே கலை வள்ளலே உலைக்குரிய பண்டம் நாடி உன்னிடம் வந்தேன். குறிப்பறியும் கொற்றவனாகிய நீ, கொலைக்குரிய இவ்விலங்கைக் கொடுத்தாயே வானர் கோமானாகிய உனக்கு இந்தப் உாணனோடு என்ன பகை' என்று வினயமாகப் பாடினான்: அது கேட்டு இன்புற்ற வாணன் இனிய பரிசளித்துப் பாணன் கவலையைப் போக்கினான். ஏகம்பவாணன் இத்தகைய வாணர்குலம் பல வீரரைத் தமிழகத்திற்குத் தத்தது. அவர்களுள் ஒருவன் ஏகம்பவாணன். தமிழ் மனங்கமழும் பாமாலையை அவர்க்குச் சூட்டி மகிழ்ந்தனர் செஞ்சொத் கவிஞர். "வாணன் புகழுரையாத வாய் உண்டோ? அவன் அடிபணிந்து நில்லாத அரசுண்டோ? என்று வாயாரப் போற்றினார் ஒரு கவிஞர் வாழையடி வாழையென வளர்ந்தது அவ்வாணர் குலம்; வீரம் விளைத்தது: தமிழை வளர்த்தது; அழியாப் புகழ் பெற்றது. 12. "உலைக்குரிய பண்டம் உவந்திரக்கச் சென்றால் கொலைக்குரிய வேழம் கொடுத்தான் - கலைக்குரிய வாணர்கோன் ஆறை மகதேச னுக்கிந்தப் பாணனோடு என்ன பகை." - பெருந்தொகை, 188. 13. "வாணன் புகழ்எழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழ்உரையா வாய் உண்டோ - வாணன் கொடிதாங்கி தில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு." - -பெருந்தொகை, 181.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/70&oldid=868517" இலிருந்து மீள்விக்கப்பட்டது