பக்கம்:தமிழர் வீரம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழர் வீரம் வேட்டை நெறி வேட்டையாடச் செல்பவர் வாய்ப்பான இடங்களில் திண்ணிய கயிறு வலைகளைக் கட்டுவர்; மோப்பம் பிடிக்கும் வேட்டை நாய்களைக் கட்டவிழ்த்து விடுவர்; பறையறைந்து காட்டைக் கலைப்பர். அப்போது விலங்குகள் விழுந்தடித்து ஒடும். அவ்விதம் கலைந்தோடும் உயிர்களைக் கண்டபடி கொல்வதில்லை பண்டை வேடர். வேட்டை வெறியிலும் ஒரு நெறியுண்டு அவர் குட்டி விலங்குகளைக் கொல்ல மாட்டார்கள், கருவுற்று வயிறலைத்து ஒடும் பெட்டை விலங்குகளை வதைக்க மாட்டார்கள்; இவற்றை விடுத்து வலிய விலங்குகளை வில்லால் எய்தும், வாளால் எறிந்தும் வீழ்த்துவர். காளத்தி வேடன் தொண்டை நாட்டுக் காளத்தி மலைச்சாரலில் வேட்டையாடப் போந்தான் ஒரு வேடன். அவன் திண்ணிய மேனி வாய்ந்தவன்; திண்ணன் என்னும் பெயருடையவன்; இளமையிலேயே முறையாக விற்கலை பயின்றவன். வேடர் குலக் கொழுந்தாய் விளங்கிய திண்ணன், முதல் வேட்டைக்கு எழுந்தான். காட்டைக் கலைக்க முன்னே போந்த வேட்டுவர் பறையடித்தனர்; பம்பை முழக்கினர்; கை கொட்டினர்; வலை விரித்தனர்; விலங்கினம் வெருவி எழுந்தது; நாற்றிசையும் ஒடிற்று. களிறும் கலையும், வேங்கையும் கரடியும் வேடர் அம்பால் அடிபட்டு விழுந்தன. 1. " வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை விரவார் அடிதளர்வுறு கருவுடையன அனைவுறுபிணை அலையார் கொடியெனஎதிர் முடுகியும்.உறு கொலைபுரிசிலை மறவோர்." - திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/80&oldid=868529" இலிருந்து மீள்விக்கப்பட்டது