பக்கம்:தமிழர் வீரம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர விளையாட்டு 81 வீறிழந்தான் அல்லன்' என்று வியந்து புகழ்ந்தார். ‘இக்காட்சியைத் தித்தன் காணும் பேறு பெற்றானில்லையே, என்று பரிவுற்றார்: ஏறு தழுவுதல வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவர். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர் நின்று தாக்கும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீறிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர். காளையும் காளையும் மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள்' என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை, கலைந்து பாயும் ஒரு காளை தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. 3. புறநானூறு, 80. 4. ஏறுகோள் = ஏறு தழுவுதல். - தொல்காப்பியம், பொருள், 53 உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/83&oldid=868532" இலிருந்து மீள்விக்கப்பட்டது