பக்கம்:தமிழர் வீரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழர் வீரம் " எம்இல் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை ஈன்ற வயிறே" என்று மனம் நொந்து." இவனைப் பெற்ற பாழும் வயிற்றைப் பீறி எறிவேன்" என்று சீறி எழுந்தாள். மான வீரம் அவள் பேச்சில் மணக்கின்றதன்றோ? வீரப் புலி ஒரு சிற்றுாரில் குடிசையில் வாழ்ந்தாள் மற்றொரு மாது. அவளைக் காண வந்தாள் ஒர் இள நங்கை, "தாயே! தள்ளாத வயதில் இக்குடிசையில் தன்னந்தனியாக இருக்கின்றாயே, உன் மகன் எங்கே?" என்று கேட்டாள். "அம்மா, என் மகன் எங்கே போன்ானோ நான் அறியேன். புலியிருந்த குகை போல் அவனைப் பெற்ற வயிறு இது. இங்குக் காணாவிட்டாலும் அவனைப் போர்க்களத்திலே காணலாம்” என்றாள் வீரத் தாய்." வீர உள்ளம் ஒர் ஊரிலே கடும்போர் நடந்தது. வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போந்தான். மாதர், விருப்புடன் ஆடவரை வழி அனுப்பினர். ஒரு மாது, முதல் நாள் நடந்த போரில் தமையனை இழந்தாள் மறுநாள் நடந்த போரில் கணவனை இழந்தாள். பின்னும் போர் நின்ற பாடில்லை. குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி நின்றான். காலையில் போர்ப் பறை முழங்கிற்று வீரரைப் போர்க்களத்திற்கு அழைத்தது; அது கேட்டு எழுந்தாள் அம் மாது. இருநாளிலும் போர் புரிந்து இறந்து பட்ட தமையனையும் தலைவனையும் நினைந்து அவள் தயங்கவில்லை; அருமைப் பிள்ளையை அன்போடு அழைத்தாள்; வெண்மையான ஆடையை உடுத்தாள்; தலையைச் சீவி முடித்தாள், வேலை எடுத்துக் கையிலே கொடுத்தாள்; போர்க்களத்தை நோக்கி அவனை விடுத்தாள்: 5. புறத்திரட்டு, 1460 (சென்னைப் பல்கலைக் கழகப் பதிப்பு) 6. புறநானூறு, 85. 7. புறநானூறு, 279.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/90&oldid=868540" இலிருந்து மீள்விக்கப்பட்டது