பக்கம்:தமிழர் வீரம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர மாதர் 89 என்னே அவள் வீர நெஞ்சம் !" என்று தமிழகம் வியந்து நின்றது. வீர மாபத்தினி இல்லறமே நல்லறம் எனக்கொண்ட தமிழ்நாட்டில் எண்ணிறந்த பத்தினிப் பெண்டிர் வாழ்ந்தனர். ஆயினும் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்த மாதர் ஒரு சிலரே. அன்னவருள் தலைமை சான்றவள் கண்ணகி. கண்ணகியின் பெருமை x < . - - - - - -- சோழவள நாட்டிலே பிறந்தாள் அம் மங்கை, பாண்டி நாட்டிலே கற்பின் ஆற்றலைக் காட்டினாள் சேரநாட்டிலே தெய்வீகமுற்றாள். எனவே, அவள் மூன்று தமிழ் தாட்டிற்கும் உரியவள். அவள் பிறந்தமையால் தமிழகம் பெருமையுற்றது. மதுரையிற் கொடுமை . மதுரை மாநகரில் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் அரசு வீற்றிருந்தான். கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் அந் நகரை அடைந்தார்கள். மனையாளது மணிச் சிலம்பை விற்றுவரக் கடைத்தெருவிற் சென்றான் கோவலன். அரண்மனைச் சிலம்பைக் களவாடினான் என்று குற்றம் சாற்றிக் காவலாளர் அவனைக் கொன்றுவிட்டார்கள். கண்ணகியின் சீற்றம் அச் செய்தியை அறிந்தாள் கண்ணகி, பொறுக்க லாற்றாது பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொருமி அழுதாள். அப்போது அவள் உள்ளத்தில் ஒர் ஊக்கம் பிறந்தது; கற்பின் வீரம் கனன்று எழுந்தது; விண்ணிலே விளங்கிய கதிரவனை நோக்கி, "ஏ, காய் கதிர்ச் செல்வனே ! கள்வனோ என் கணவன்?" என்று அவள் கதறினாள்; கோவலன் கொலையுண்ட இடத்தை நோக்கி ஓடினாள்; குருதி வெள்ளத்திற் கிடந்த கணவனைக் கண்டாள்; அவன் மேனியில் விழுந்து கல்லும் கரையக் கண்ணிர் சொரிந்து அழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/91&oldid=868541" இலிருந்து மீள்விக்கப்பட்டது