பக்கம்:தமிழர் வீரம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரக்கல் 93 அவன் வீரத்தோள் மெலிந்தது; பொன்னிற மேனி பொலிவிழந்தது. பசிப்பிணியைப் பொறுத்துப் புன்னகை பூத்த முகத்தினனாய் விளங்கிய புரவலன் நிலை கண்டு மனம் உருகினர் சான்றோர். சில நாளில் அவன் நல்லுயிர் உடலை விட்டுப் பிரிந்தது. அப்போது உடனிருந்த அன்பர்கள் அந்த ஆன்ம வீரனுக்குக் கல் நாட்டினர்; கண்ணிர் வடித்தனர்; கல்லிலே நின்ற காவலனைத் தமிழ்ச் சொல்மாலை அணிந்து போற்றினர். அந் நடுகல்லைக் கண்டார் ஒரு கவிஞர்; அடக்க முடியாத துயரத்தால் வாய்விட்டு அரற்றினார். "ஐயோ, நடுகல் ஆயினான் நல்லரசன் ! கவிஞரை ஆதரித்த காவலன் ! கூத்தரைக் கொண்டாடிய கொற்றவன் ! அறநெறி வழுவாத புரவலன்! ஆன்றோரிடம் அன்பு வாய்ந்தவன்! மெல்லிய லாரிடம் மென்மையுடையவன்! வல்லியலாரிடம் வன்மை யுடையவன் அறவோர்க்குப் புகலிடம் ! இத்தகைய மேதையின் உயிரைக் கவர்ந்தானே கண்ணற்ற கூற்றுவன் ! மாசற்ற புலவீர் ! அவனை ஏசுவோம், வாரீர் !" என்று தம் ஆற்றாமையை அறிவித்தார் கவிஞர்." வேங்கையைக் கொன்ற வீரன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பாலாற்றங்கரையில் ஒரு பெரும்புலியைக் கொன்ற வீரன் இன்றும் கல்லிலே நின்று காட்சி தருகின்றான். தலையிற் குட்டையும், இடையில் ஆடையும் கட்டிய ஆண் மகன் புலியோடு போர் 5. " -ιιιιιιιιιιιιιιιιιιιιιιι.இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" - கோப்பெருஞ்சோழன் பாட்டு - புறநானூறு, 214. 6. " வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை உலகம் அரந்தை துங்கக் கெடுவில் நல்லிசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே." - பொத்தியார் பாட்டு : புறநானூறு, 221.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/95&oldid=868545" இலிருந்து மீள்விக்கப்பட்டது