பக்கம்:தமிழர் வீரம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழர் வீரம் செய்யும் பான்மையில் அமைந்துள்ளது அவ் வடிவம். புலி, முன்னங் கால்களைத் துக்கி அவனைத் தாக்குகின்றது; இடக் கையைப் பற்றிக் கடிக்கின்றது; அந்த நிலையில் அவனது வலக்கையில் அமைந்த வாள் அதன் வயிற்றினுடே பாய்கின்றது. இவ்வாறு வாளாண்மையால் வேங்கையைக் கொன்ற வீரனுக்கு வீரக்கல் நாட்டினர் தமிழர்” ஆநிரை மீட்ட வீரர் இன்னும், வட ஆர்க்காட்டில் உள்ள ஆம்பூரில் அகளங்கன் என்பவன் ஒரு தலைவனாக விளங்கினான். ஒரு நாள் நுளம்பைப் பல்லவர் படை ஆம்பூரிற் புகுந்தது; பசு நிரைகளைக் கவர்ந்தது. அதைக் கண்டனர் இருவர். ஒருவன் அகளங்கன் மைந்தன், இன்னொருவன் அவன் மருகன். இருவரும் போந்து மாற்றாரைத் தடுத்தனர்; வெம்போர் தொடுத்தனர்; பசுக்களை மீட்டனர்; ஆயினும் போர் முனையில் விழுந்து பட்டனர். உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட இருவரும் வீரக்கல்லில் இன்றும் விளங்குகின்றார் கள். வலக்கையில் வாளும், இடக்கையில் வில்லும் கொண்டு போர் புரியும்போது, மாற்றார் விடுத்த அம்புகள் அவர் மார்பில் பாயும் பான்மையைக் காட்டுகிறது அக் கல்.’ இத்தகைய நடுகல் நூற்றுக்கணக்காகத் தமிழகத்தில் உண்டு. வள்ளுவர் காட்டும் வீரக்கல் வீரக்கல்லின் மாட்சியை ஒரு நாடகக் காட்சியாகக் காட்டினார் திருவள்ளுவர். ஒரு போர்க்களம், இரு திறத்தார் படையும் அணிவகுத்து நிற்கின்றது. அப்பொழுது முன்னணியில் உள்ள ஒரு வீரன் சற்று முன்னே வந்து, " மாற்றாரே " என்று இடிபோல் முழங்குகின்றான். எல்லாக் கண்களும் அவனையே நோக்குகின்றன; எல்லாச் செவிகளும் அவன்பால் திரும்புகின்றன. அப்போது அவன் பேசுகின்றான்; " போர் புரியப் போந்த வீரரே ! உமக்குக் 7. EP. Ind, Vol, IV., P. 179. 8. Ep. Ind. Vol, IV., P. 180.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/96&oldid=868546" இலிருந்து மீள்விக்கப்பட்டது