பக்கம்:தமிழர் வீரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரக்கல் 35 காலில் நிற்க விருப்பமா? கல்லில் நிற்க விருப்பமா? காலில் நிற்க விரும்பினால் என் தலைவன் முன்னே நில்லாதீர்! இதற்கு முன் அவன் எதிர் நின்றோர் எல்லாம் இன்று கல்லிலே நிற்கின்றார்கள். ஆதலால் போர்க்களத்தை விட்டு ஒடுங்கள்" என்று உறுதியாகப் பேசுகின்றான். அவன் பேச்சின் பொருள் என்ன? " உயிரோடிருக்க ஆசைப் பட்டால் என் தலைவனை எதிர்க்க வேண்டாம். போரில் அடிபட்டு, உயிர் விட்டு வீரக் கல்லில் நிற்க ஆசைப்பட்டால் படைக்கலம் எடுக்கலாம்; போர் தொடுக்கலாம்" என்பது அவன் கருத்து. எனவே, புகழே உயிரினும் பெரிதெனக் கருதிய தமிழ் வீரர் எந்நாளும் படைக்குப் பிந்தியவரல்லர் என்பதும், அன்னாரைத் தமிழகம் போற்றிப் புகழ்ந்து வழிபட்டது என்பதும் நடுகல்லால் நன்கு விளங்கும். 9. என்ஜமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்.என்.ஐ முன்நின்று கல்தின் றவர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/97&oldid=868547" இலிருந்து மீள்விக்கப்பட்டது