பக்கம்:தமிழர் வீரம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வீர விருதுகள் வீரம் - மனத்திண்மை - போர்க்களத்தில் வெற்றி பெறுதற்குப் புயத்திண்மை மட்டும் போதாது; மனத்திண்மையும் வேண்டும். " வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்பது வள்ளுவர் வாய்மொழி, மனத்திட்பமற்றவர் கோழைகள், பேடிகள். புலியடிக்கு முன்னே பேடியைக் கிலியடிக்கும் என்பது இந் நாட்டுப் பழமொழி. ஏனாதிப் பட்டம் மனத்திட்பமுடைய படைத் தலைவரைத் தமிழ் மன்னர் சிறப்பித்தனர்; ஏனாதிப் பட்டமளித்துப் பாராட்டினர். அப் பட்டத்தின் சின்னம் ஒர் அழகிய மோதிரம், அதனை அரசன் கையால் அணியப்பெற்ற படைத்தலைவர் பெருமதிப்புக்கு உரியவராயினர்; "... போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரம்சேர் ஏனாதிப் பட்டத் திவன்" ான்று நாட்டார் ஏத்தும் நலம் பெற்றனர். சோழ மன்னரால் சனாதிப் பட்டம் வழங்கப் பெற்றவர் சோழிய ஏனாதி ான்று சிறப்பிக்கப்பட்டார்கள். அன்னவருள் சிலர் பெருமையைப் பழங் கவிதையிற் காணலாம். திருக்கிள்ளி - திருக்கிள்ளி என்பவன் சோழிய ஏனாதிகளில் ஒருவன். அவன் சிறந்த போர்வீரன்; எப்பொழுதும் முன்னணியில் 1. பெருந்தொகை, 455.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/98&oldid=868548" இலிருந்து மீள்விக்கப்பட்டது