பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை


இந்நூலாசிரியாகிய திரு.ம. ப. பெரியசாமி (பெ. தூரன்) என்பவர், ஆங்கில மொழியில் உயர்தரப்பட்டங்கள்பெற்றுக் கோவை ஜில்லா பெரியநாய்க்கன்பாளையத்திற்கு அணித்தான ஶ்ரீஇராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் என்னும் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராயமர்ந்து தம் கடமையைச் செவ்வனே ஆற்றிவருபவராவார். அவர் தாய் மொழிப்பற்றும், இசையறிவும் வாய்க்கப்பெற்றவாதலின் தம் அலுவல்களுக்கு இடையே கிடைக்கும் ஒய்வு, நேரங்களை வீணடிக்காமல் அவ்வப்போது தம் உள்ளத்தெழும் கருத்துக்களைத் தமிழிசைப் பாடல்களில் அமைத்து எழுதி வருவாாயினர். இந்நிலையில், பெருங்கொடைவள்ளலும், பல்கலைக் கழகம் நிறுவிய பெருந்தகையாளரும், பொது நன் மக்களுடைய உடலுயிர்கட்கு உறுதி பயப்பனவான எத்துணையோ பல போறங்களைப் புரிந்த பேருதவியாளரும் ஆகிய உயர்திரு. செட்டிநாட்டு அரசர் பெருமானவர்கள் தமிழ்நாட்டின்கண் நிகழும் இசையரங்குகளிலும்:கல்விநிலையங்களிலும் சொற்பொருட் சுவையுணர்ந்து இன்புறத்தக்க இனிய எளிய தமிழ் மொழியால் அமைந்த இசைப்பாடல்கள் பாடப்பெறுதலே இக்கால இயல்பிற்கும். மக்கள் அறிவிற்கும் பொருத்தமானதாகும் எனப் பல்லாற்றானும் நன்காராய்ந்து துணிந்து தமிழிசை வளர்ச்சியின்பொருட்டுப் பல்லாயிரக்கணக்கான பொருளே, நன்கொடையாக உதவினார்கள். அவ்வாறு உதவியதோடமையாது இசைக்கலையின் பல வேறு பகுதிகட்கும் புதுப் பாடல்களை யாக்கவும்,முன்னோர்களால் இயற்றப்பெற்ற தமிழிசைப்பாடல்களை ஒருங்கே திரட்டவும், இவற்றைச் சுரதாளக் குறிப்புக்களுடன் புதிய முறையிற் பதிப்பித்துப் பலர்க்கும் பயன்படும் வண்ணம் வெளியிடவும் வேண்டிய தமிழிசைக் குழூஉவை