பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த பாடல்‌ தமிழவேள்‌ படுப்புச்‌ செம்மல்‌ ச. மெய்யப்பன்‌ டந்த முப்பது ஆண்டுகளாக மணிவாசகர்‌ பதிப்பகம்‌ 500 நல்ல நூல்களை வெளியிட்டு நாளும்‌ வளர்ந்து வருகிறது. தமிழ்‌ வழங்கும்‌ இந்தியப்‌ பல்கலைக்‌ கழகங்களிலே” 50க்‌்கு. மேற்பட்ட நுல்கள்‌ பாடநூல்களாக ஏற்றுக்கொள்ளப்‌ பெற்றுள்ளன. 35 நூல்கள்‌ மாநில, மத்திய மற்றும்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகப்‌ பரிசுகளைப்‌ பெற்றுள்ளன. மொழியியல்‌, நாட்டுப்புறவியல்‌, பண்பாட்டியல்‌, மானிடவியல்‌, தகவல்‌ தொடர்பியல்‌, நிதியியல்‌, சுற்றுலாவியல்‌” முதலிய துறைகளில முதன்‌ முதலில்‌ அதிகாரபூர்வமாகப்‌ பெருநூல்களை வெளியிட்ட பெருமையுடையது, மணிவாசகர்‌ பதிப்பகம்‌. நாட்டுடைமையாக்கப்பட்ட பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ நூல்கள்‌ அனைத்தையும்‌ செம்பதிப்பாகக்‌ கொண்டு வந்த சிறப்புடையது. இருபதாம்‌ நூற்றாண்டில்‌ தமிழ்‌ இயக்கத்தின்‌ தலையூற்றுக்களாக இருபெரும்‌ இயக்கங்கள்‌ முகிழ்த்தன. தனித்தமிழ்‌ இயக்கம்‌ வீறார்ந்த மரபுகளுடன்‌ வெற்றி குவித்தது. தமிழ்‌ இயக்கத்தின்‌ வெற்றி ஊரறிந்தது; உலகறிந்தது. தமிழ்‌ இயக்க விகைவு எல்லாத்‌ துறைகளிலும்‌ தன்னுடைய நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களைப்‌ பதிவு செய்துள்ள வரலாற்றினை மணிவாசகர்‌ பதுப்பகம்‌ *தனித்‌ தமிழ்‌ இயக்கம்‌" எனும்‌ நூலில்‌ ஆவணமாக்கியுள்ளது. அதனைத்‌ தொடர்ந்து இப்பொழுது தமிழிசை இயக்கம்‌ மலர்கிறது. இந்த ஆண்டு தமிழிசை இயக்கத்தின்‌ பொன்விழா ஆண்டு. தமிழிசை இயக்கத்தின்‌ எழுச்‌ச அலைகள்‌ என்னுள்‌ எப்பொழுதும்‌ ஒரு இளர்ச்‌சியை எழுப்பிக்‌ கொண்டிருக்கும்‌. அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகத்இன்‌ முப்பது ஆண்டுப்‌ பணி, இந்த இயக்கத்தின்‌ நலன்களைப்‌ பதிவு செய்யத்‌ துடித்தது. பல்துறை அறிஞர்‌ இளங்குமரன்‌ அவர்களைக்‌ கொண்டு இந்த நூலினை உருவாக்கத்‌ இட்டமிட்டோம்‌. சென்னைத்‌ தமிழிசைச்‌ சங்கத்தின்‌ ஆண்டறிக்கைகள்‌ முழுதும்‌ பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்‌ மக்கள்‌ தங்கள்‌ முகங்களை ஒவ்வொரு துறையிலும்‌ இழந்துவரும்‌ இந்நாளில்‌, இவ்வகை நூல்கள்‌ இன்றியமையாதவை ஆகின்றன. தமிழிசை இயக்கம்‌ என்பது நீண்ட நெடிய போராட்ட