பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏந்திக்‌ காத்தவர்கள்‌ அனைவரும்‌ என்றும்‌ நம்‌ வணக்கத்துக்‌ குரியவர்கள்‌. இப்பேரியக்கத்‌ தேரினைப்‌ பெருமையுடன்‌ இழுத்து வந்தோர்‌ பலர்‌. பெயரும்‌ தெரியாத பெருமக்கள்‌ எத்தனையோ பேர்‌. அனைவரும்‌ நம்‌ நன்றிக்குரியவராகன்றனர்‌. காலத்தின்‌ சுவடு அழியாது காப்பது நம்‌ கடமை என்று கருதி இப்‌ பெருநூலை இயற்றும்‌ இருப்பணியினை அறிஞர்‌ இளங்குமர னாரிடம்‌ ஒப்படைத்தோம்‌. தமிழே மூச்சாக - பேச்சாகக்‌ கொண்டு வாழும்‌ அறிஞர்‌ இந்நூலினை உருவாக்கப்‌ பெருமுயற்ட எடுத்துக்‌ கொண்டார்‌. பெரிய திட்டத்துடன்‌ நீடு உழைத்தார்கள்‌. ஐம்பதாண்டு வரலாற்றினையும்‌ அணுஅணுவாக ஆராய்ந்தார்கள்‌. இவ்வியக்‌ கத்தின்‌ பன்முக நலன்களைத்‌ தெளிவாக உணர்ந்தார்கள்‌. உணர்ந்த வண்ணம்‌ உயர்ந்த நூலாக வடித்துள்ளார்கள்‌. ஓர்‌ இயக்கத்தின்‌ வரலாறாகக்‌ கொள்ளாமல்‌, ஓர்‌ இன எழுச்சி யின்‌ வரலாற்றுக்‌ காவியமாக இதனை உருவாக்தியுள்ளார்கள்‌. இயக்கம்‌ எழுந்த கதையினையும்‌ வளர்ந்த கதையினையும்‌ விடியல்‌ கண்ட வரலாற்றையும்‌ பட்டயமாக்கியுள்ளார்கள்‌. அடிப்படைச்‌ சான்றாதாரங்களைத்‌ தொகுத்துக்‌ கல்வெட்டாக்கியுள்ளார்கள்‌. தமிழிசை இயக்கம்‌ பற்றிய ஆதாரபூர்வமான - முழுமையான முதல்நூலாக இது திகழ்கிறது. அ2இரியர்‌ இதற்கெனப்‌ பார்த்த கட்டுரைகளும்‌ படித்த நூல்களும்‌, எழுஇய குறிப்புகளும்‌ எண்ணில்‌ அடங்கா. தவமிருந்து தனித்தமிழ்‌ இயக்கம்‌, தமிழிசை இயக்கம்‌ எனும்‌ இருபெரும்‌ நூல்களைத்‌ தமிழ்‌ வேள்விக்கு அளித்த தனிப்‌ பெரும்‌ பெருமைக்குரியவராடறார்‌. இயக்கத்துன்‌ படிமுறை வளர்ச்‌ நிலைகளைப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறார்‌. இயக்கத்திற்கு அகத்திலும்‌ புறத்திலும்‌ தோன்றிய எதிர்ப்புக்‌ களுக்கும்‌ ஏச்சுக்களுக்கும்‌ பேச்சுக்களுக்கும்‌ இயக்கப்‌ பொறுப்பாளர்‌ களின்‌ தளரா முயற்சி முனைகளின்‌ கூர்மையை ஆசிரியர்‌ விளக்கி யுள்ள இறம்‌ இயக்க வரலாறுகள்‌ எழுதுவதற்கு முன்மாதிரியாகத்‌ இகழ்கிறது. “இசைக்கு மொழி வேண்டாம்‌: என்ற குரல்‌ இந்நாளில்‌ மீண்டும்‌ ஒலிக்கிறது. தமிழிசை வெற்றி பெறவில்லை என்ற குரலும்‌ €ச்டடுவறது. இந்த நிலையில்‌ துறைதொறும்‌ தமிழுக்குத்‌ தொண்டு செய்யும்‌ மணிவாசகர்‌ பஇப்பகம்‌ இதனை அறைகூவலாக ஏற்றுக்‌ கொண்டு செவ்விய இட்டத்துடன்‌ இந்நூலை உருவாக்கியுள்ளது.