பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல்‌ காலத்தின்‌ கட்டாயமாகிறது. தமிழிசைச்‌ தழலில்‌ வாழ்ற அண்ணாமலைப்‌ பல்கலைக்‌ கழகத்தில்‌ எனக்கு இந்த நல்லுணர்வு நாளும்‌ முடழ்க்கும்‌. இப்பொழுது செய்யாவிட்டால்‌, எப்பொழுது செய்வது? நாம்‌ செய்யாவிட்டால்‌ வேறு யார்‌ செய்வர்‌? என்ற விழிப்புணர்வே இந்நூல்‌ எழ மூலகாரணம்‌. இந்த மாபெரும்‌ இயக்கத்தின்‌ வரலாறு நிகழ்வுகள்‌ மறைக்கப்படலாகாது என்ற நோக்குடனேயே நூல்‌ வருகிறது. ஆன்ற அறிஞர்குழு இவ்வியக்கத்திற்கு வலிமை சேர்த்தாலும்‌, அண்ணாமலை அரசர்‌, தமிழிசைக்‌ காவலர்‌ முத்தையவேள்‌, பெரியவர்‌ எம்‌.ஏ. சிதம்பரம்‌, இணைவேந்தர்‌ எம்‌.ஏ.எம்‌. இராமசாமி, டாக்டர்‌ ஏ.௪. முத்தையா முதலிய அண்ணாமலை அரசர்‌. கால்வழியினர்‌ வழிவழியாக வளர்‌ தமிழிசைக்குச்‌ செய்துள்ள - செய்து வரும்‌ தொண்டு செப்பேட்டுப்‌ பெருமை வாய்ந்தது. ஆண்டுதோறும்‌ நடக்கும்‌ தமிழிசை மாநாடுகளும்‌ பண்ணாய்‌ வும்‌, வல்லுநர்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ இசைப்‌ பேரறிஞர்‌ விருதுகளும்‌, தமிழிசை இயக்கத்தின்‌ வெற்றிச்‌ இன்னங்களே! தமிழிசை இயக்கத்திற்கு என்றும்‌ கட்டியம்‌ கூறும்‌, மதுரையில் எழுந்துள்ள மாபெரும்‌ மன்றமாடிய முத்தையா மன்றமும்‌ புகழுடன்‌ விளங்கும்‌ பொள்ளாச்சி தமிழிசைச்‌ சங்கமும்‌ இவ்வியக்கத்தின்‌ புகழ்பாடும்‌ பொன்‌ மலர்களே!

இவ்வியக்கத்தின்‌ பயனாகத்‌ இருக்குறளுக்கே இசைவடிவம்‌ அமைத்ததும்‌, கம்பணின்‌ செவிநுகர்‌ கனிகளாகிய பாடல்களுக்கு இசைவடிவம்‌ அமைத்ததும்‌, பட்டினத்தார்‌, தாயுமானவர்‌ பாடல்‌ களுக்குப்‌ பண்‌ வகுத்ததும்‌ இவ்வியக்க உணர்வின்‌ வீச்சே!

அருணஒரியாரின்‌ இருப்புகழும்‌, அருட்பிரகாச வள்ளலாரின்‌ திருவருட்பாவும்‌ இன்று வீதிதோறும்‌ உலா வருவதும்‌ இதன்‌ விளைவே! ப

ண்சுமந்த பாடலின்‌ உள்ளார்ந்த உயர்நுட்பங்களைத்‌ தெள்ளத்‌ தெளிவாகத்‌ தமிழிசை இயக்கம்‌ எடுத்துப்‌ பறைசாற்றியது.

வள்ளல்‌ பொள்ளாச்‌௫ி மகாலிங்கம்‌ ஆண்டுதோறும்‌ நடத்தும்‌ தேவார மூவரிசை விழா தமிழிசை இயக்கத்தின்‌ மற்றொரு ஆளுமை மிகுந்த விரிவாக்கமே! திருக்கழுக்குன்றத்‌இல்‌ ஆண்டுதோறும்‌ சேலம்‌ ஜெயலட்சுமி அவர்கள்‌ எடுக்கும்‌ இருஞானசம்பந்தர்‌ இசை வெள்ளமும்‌ இந்த இசையியக்க ஆற்றின்‌ பெருக்கே!

தமிழோடு இசைபாடும்‌ நன்மரபும் நலமுடன் விளக்கம் பெற்றது. திருமுறையத் தமிழ்நாடு தழுவிய இயக்கமாக ஞானசம்பந்தர்‌ தம்