பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1. ஒன்றுளே மூன்று

ஒன்றுளே இரண்டு (790 1௩ 009), ஒன்றுளே மூன்று (11466 1 ௦06) என்பவை இக்கால அறிவியல்‌ கண்டூ பிடிப்புகள்‌. ஒன்றுளே மூன்று என்பது நம்‌ முந்தையோர்‌ கண்ட மொழியியல்‌ நிலைபேறு.

தமிழ்‌ என்பது மொழிப்பெயர்‌. அதன்‌ செம்மை வரம்பு கொண்டு செந்தமிழ்‌ எனப்பட்டது. அதன்‌ மும்மை இயக்கம்‌ கொண்டு முத்தமிழ்‌ எனப்பட்டது.

  • தமிழ்‌' என ஒட்டுமொத்த அமைப்பாகவும்‌ வழங்கப்பட்டது. “தமிழ்கள்‌* எனப்‌ பகுப்பாய்வுக்‌ கூறுகளாகவும்‌ வழங்கப்பட்டது. முன்னதற்குச்‌ சான்று தேட வேண்டியதில்லை. உலகளாவிய வழக்கு அது. "வடவேங்கடம்‌ தென்குமரி ஆயிடைத்‌ தமிழ்கூறு நல்லுலகம்‌” என்னும்‌ தொல்காப்பியப்‌ பாயிரம்‌ ஒன்று சாலும்‌.

பின்னதற்கு, "இமிழ்கடல்‌ வரைப்பில்‌ தமிழக மறியத்‌ தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி”

என்னும்‌ சலப்பஇகார அடிகளுக்கு, “தமிழோரால்‌ எல்லை கூறப்படா நின்ற தமிழ்த்‌ தேசத்தார்‌ அறிய மூன்று தமிழும்‌ போம்‌ என்னும்‌ தன்மையுடையனாக” யென்று அரும்பத உரைகாரரும்‌ அடியார்க்கு நல்லாரும்‌ உரைக்கும்‌ உரைகளாலும்‌,

"தமிழென்றது, வடவெழுத்‌ தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து கட்டப்பட்ட. வாக்கியக்‌ கூறுகளும்‌ இய லிசை நாடக மென்று சொல்லப்பட்ட மூவகைத்‌ தமிழ்களும்‌” என்று அவர்கள்‌ எழுதும்‌ விளக்கத்தானும்‌ லப்‌. 3:45) அறியலாம்‌.

முத்தமிழ்‌ எனத்‌ தனித்தனிப்‌ பாகுபாடு உடையதாயினும்‌ அஃது ஒத்தியங்கும்‌ ஒருமையது என்பதைப்‌, "பாணி என்றது பாட்டு” அது முத்தமிழுக்கும்‌ பொது. அஃது இயற்றமிழில்‌ வருங்கால்‌... இனி இசைத்தமிழில்‌ வருங்கால்‌ ... இனி, நாடகத்‌ தமிழில்‌ வருங்கால்‌ ... என விரித்துக்‌ கூறும்‌ அடியார்க்கு நல்லார்‌ உரை கண்டூ தெளிக. (6:35) 4.2,