பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 தமிழிசை இயக்கம்‌

பழந்தமிழ்‌ நூல்கள்‌ இலவற்றை இறையனார்‌ களவியலுரை சுட்டுகின்றது. சிலவற்றின்‌ பெயர்களைக்‌ குறிப்பிடும்‌ அது இத்தொடக்கத்தன எனப்பல நூல்களை உட்கொண்டு கூறுகின்றது.

"தலைச்சங்கம்‌ இருந்தவர்களால்‌ பாடப்பட்டன, எத்துணையோ பரிபாடலும்‌, முதுநாரையும்‌, முதுகுருகும்‌, களரியா விரையும்‌ என இத்தொடக்கத்தன.

"இடைச்சங்கம்‌ இருந்தவர்களால்‌ பாடப்பட்டன, கலியும்‌, குருகூம்‌, வெண்டாளியும்‌, வியாழமாலை அகவலும்‌ என இத்‌ தொடக்கத்தன.

"கடைச்சங்கம்‌ இருந்தவர்களால்‌ பாடப்பட்டன, நெடுந்தொகை நானூறும்‌, குறுந்தொகை நானூறும்‌, நற்றிணை நானூறும்‌, புறநானூறும்‌, ஐங்குறுநூறும்‌, பதிற்றுப்பத்தும்‌, நூற்றைம்பது கலியும்‌, எழுபது பரிபாடலும்‌, கூத்தும்‌, வரியும்‌, சற்றிசையும்‌ பேரிசையும்‌ என்று இத்தொடக்கத்தன.”

என்பது அது. இவற்றுள்‌ பல இசைத்‌ தமிழ்நூல்கள்‌ என்பது தம்பெயரானே வெளிப்படும்‌.

இசைத்‌ தமிழ்நூல்களைத்‌ தனியே அறியுமாறு,

"இசைத்தமிழ்‌ நூலா௫ிய பெருநாரை பெருங்குருகும்‌ பிறவும்‌ தேவவிருடி நாரதன்‌ செய்த பஞ்சபாரதீய முதலா உள்ள தொன்னூல்‌ களும்‌ இறந்தன. நாடகத்‌ தமிழ்‌ நூலாகிய பரதம்‌ அகத்தியம்‌ முதலாக வுள்ள தொன்னூல்களும்‌ இறந்தன. பின்னும்‌ முறுவல்‌ சயந்தம்‌ Sempre செயிற்றியம்‌ என்பனவற்றுள்ளும்‌ ஒரு சார்‌ சூத்‌இரங்கள்‌ நடக்கின்ற அத்துணையல்லது முதல்‌ நடு இறுதி காணாமையின்‌ அவையும்‌ இறந்தன போலும்‌. இறக்கவே வரும்‌, பெருங்கல முதலிய பிறவுமாம்‌” என அடியார்க்கு நல்லார்‌ உரைப்பாயிரம்‌ நன்கு விளக்குகிறது.

சிலப்பதிகாரம்‌ "முழுத்தும்‌ பழுதற்ற முத்தமிழ்‌” எனப்பட்டதும்‌. அதனை இயற்றிய இளங்கோவடிகளார்‌, “முத்தமிழ்க்‌ கல்வியும்‌ வித்தகக்‌ கவியும்‌” உடையார்‌ என்பதும்‌ அவ்வுரைப்‌ பாயிரத்தாலே விளங்கும்‌.

நூன்மரபு சொல்லும்‌ ஆசிரியர்‌ தொல்காப்பியர்‌ அதன்‌ நிறைவில்‌,