பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒன்றுளே மூன்று 3

  • அளபிறந்‌ துயிர்த்தலும்‌ ஒற்றிசை நீடலும்‌

உளவென மொழிப இசையொடு ௪வணிய நரம்பின்‌ மறைய என்மனார்‌ புலவர்‌” என்றார்‌.

"இயற்றமிழில்‌ உயிர்‌ எழுத்தும்‌ ஒற்றெழுத்தும்‌ ஒலிக்கும்‌ ஒலிநிலைவேறு; அவ்வெழுத்துகள்‌, இசைத்தமிழில்‌ ஒலிக்கும்‌ ஒலிநிலைவேறு: அதனை அவ்விசை நூலில்‌ கண்டு கொள்க” என்றார்‌.

அவர்‌ காலத்திற்கு முன்னரே இசைத்தமிழ்‌ நூல்கள்‌ தனித்து விளங்கியமையாலேதான்‌, “இசையொடு இவணிய நரம்பின்‌ மறைய” என்றார்‌. :மறை' என்பது நூல்‌ என்னும்‌ பொருளதாதல்‌ அறிக.

தமிழிசை பாடுபவரும்‌ தெலுங்கிசை பாடுபவரும்‌ கருநாடக வடமொழி இசைபாடுபவரும்‌ “சரி கமப த நி: என்னும்‌ எழுத்து களையே இசைத்து முழக்குதலைக்‌ கேட்பவர்‌ வடமொழியில்‌ இருந்தே தமிழிகை உண்டாயிற்று என்ற முடிவுக்கு வந்துவிடுவார்‌. அந்த முடிவுக்கு வருதல்‌ வேண்டும்‌ என்பதே அவர்கள்‌ ஆர்வமாகவும்‌ திட்டமிட்ட ஒட்டுமொத்த வேலையாகவும்‌ இருந்துள்ளமை தெளி வாகும்‌. இல்லையானால்‌, “பழமலை” விருத்தாசலமாகவும்‌, மறைக்‌ காடு' வேதாரணியமாகவும்‌ ஆக்கப்பட்டிராவே! பழமலை, மறைக்‌ காடூ என்பவற்றின்‌ தடத்தை மறைத்துவிடத்தானே விருத்தாசலமும்‌ வேதாரணியமும்‌ எழுந்தன. இதனை எண்ணிப்‌ பார்ப்பவர்‌ தமிழிசை அயலிசையான வரலாற்றைக்‌ கண்டூ கொள்வர்‌.

"சூரலே துத்தம்‌ கைக்கிளை உழையே இளியே விளரி தாரம்‌ என்றிவை எழுவகை இசைக்கும்‌ எய்தும்‌ பெயரே” என்ூறது முதல்‌ நிகண்டாகிய இவாகரம்‌.

சூரல்‌, துத்தம்‌, கைக்களை, உழை, இளி. விளரி. தாரம்‌ என்னும்‌ இவ்வேழிசைக்கும்‌ உரிய எழுத்துக்கள்‌ இவை என்பதையும்‌, இவை பிறக்கும்‌ இடம்‌ இவை என்பதையும்‌, இவற்றின்‌ மாத்திரை இவ்விவ்வளவு என்பதையும்‌ அத்திவாகரம்‌ முறையே கூறுகின்றது.

“ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஒளவெனும்‌ இவ்வே ழெழுத்தும்‌ ஏழிசைக்‌ குரிய” “மிடறும்‌ தாலும்‌ அண்ணமும்‌ சிரமும்‌