பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழிசை இயக்கம்‌ நெற்றியும்‌ நெஞ்சும்‌ நாசியும்‌ முறையே குரலாதி யேழிசைக்‌ குப்பிறப்‌ பிடமே” "இளிதுத்தம்‌ குரல்‌ ஏற்கும்‌ நந்நான்கே; இளையும்‌ விளரியும்‌ மும்மூன்று, உழையும்‌ தாரமும்‌ இவ்விரண்‌' டேழிசை மாத்திரை” என்பன அவை. “தமிழிசை வேற்றிசையாக மாற்றப்பட்டிருக்குமா? என்று மயங்‌கியவரை ஏமாற்றிய காலம்‌ எப்பொழுதோ போய்‌ ஒழிந்தது! எண்ணிப்‌ பார்ப்பவர்‌ எவருக்கும்‌ வெளியிடை மலையாக விளங்கு வதே இது. “மிலச்சர்‌ ஆரியர்‌” என்பது இவாகரம்‌. இதனை எப்படி மாற்றிப்‌ பதிப்பித்தனர்‌? “அராரியர்‌ மிலேச்சர்‌: ஓர்‌ “அ: ஒட்டால்‌, ஆரியர்‌ அல்லார்‌ அனைவரும்‌ மிலேச்சர்‌ ஆக்கப்பட்டு விடவில்லையா? இதனை முதற்கண்‌ எடுத்துக்‌ காட்டியவர்‌ - ஏட்டொடும்‌ ஒப்பிட்டுக்‌ கண்டு உண்மை உரைத்தவர்‌ - பேராசிரியர்‌ ச. வையாபுரியார்‌. ஏழிசை எழுத்தின்‌ பெயர்க்கு இரண்டு நூற்பாக்கள்‌ உள. அவை அச்சில்‌ அமைந்து கடக்கும்‌ முறை எவ்வாறு? “சவ்வும்‌ ரிவ்வும்‌ கவ்வும்‌ மவ்வும்‌ பவ்வும்‌ தவ்வும்‌ நிவ்வும்‌ என்றிவை ஏழும்‌ அவற்றின்‌ எழுத்தே யாகும்‌.” ”ஆஈ ஊஏ ஐஓ ஒள என்னும்‌ இவ்வே ழெழுத்தும்‌ ஏழிசைக்‌ குரிய” என்று அமைந்துள. இந்நூற்பாக்கள்‌ இரண்டையும்‌ தனித்தனியே ட்டில்‌ எழுது, மொழி இயல்‌ அறிந்த ஒருவரிடம்‌ தந்து. “இஇல்‌ எது முன்னதாக இருக்க வேண்டும்‌? எது பின்னதாக இருக்க வேண்டும்‌?” எனக்‌ கேட்டால்‌, பின்னதே முன்னதாகவும்‌, முன்னதே பின்னதாகவும்‌ இருக்க வேண்டும்‌ எனத்‌ தெளிவாக்கிவிடுவார்‌. ஏனெனில்‌ மொழியியல்‌ அதனை அவர்க்குத்‌ தெளிவாக அவ்வாறு காட்டி விடுகின்றது.