பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2. பண்சுமந்த பாடல்கள்‌

1. 1ழந்தமிழ்‌ இலக்கண நூல்களுள்‌ முழுமையாகக்‌ கிடைத்துள்ள நூல்‌ தொல்காப்பியம்‌. அத்தொல்காப்பியத்திற்கு முன்னை இலக்கண நூல்கள்‌ எண்ணற்று இருந்தன. இலக்கண நூல்கள்‌ அவ்வாறு பல்க இருந்தன எனின்‌, இலக்‌இய நூல்கள்‌ அவற்றினும்‌ மிகுதியாக இருந்திருத்தல்‌ வேண்டும்‌. எனெனில்‌, “இலக்கியம்‌ கண்டதற்கு இலக்கணம்‌ இயம்பல்‌” என்பது இலக்கண நெறிமுறை ஆகலின்‌.

தொல்காப்பியத்தில்‌ “நரம்பின்மறை” எனப்படும்‌ இசைநூல்‌ குறிக்கப்படுூதலை அறிந்துள்ளோம்‌. அவர்‌ கூறும்‌ அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபா என்பனவெல்லாம்‌ இயற்பா எனினும்‌, இசைப்பாக்களேயாம்‌.

செய்யுளியல்‌ முதல்‌ நூற்பாவிலேயே - செய்யுள்‌ உறுப்புகள்‌ இவை எனக்‌ கூறும்‌ நூற்பாவிலேயே-

"நல்லிசைப்‌ புலவர்‌ செய்யுள்‌ உறுப்பென” வகுத்து உரைத்தமையைக்‌ கூறுகிறார்‌ (செய்‌. 1).

பாவின்‌ அடிப்படை உறுப்பான அசையைக்‌ கூறுமிடத்தில்‌, "அசையும்‌ €ரும்‌ இசையொடு சேர்த்து”

வகுத்து உணர்த்துதலை உரைக்கிறார்‌ (செய்‌. 10).

பா எனப்படுவதும்‌ இசை வழிப்பட்டதே என்பதை, "பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும்‌ ஒருவன்‌ எழுத்தும்‌ சொல்லும்‌ தெரியாமல்‌ பாடம்‌ ஓதுங்கால்‌, அவன்‌ சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கு ஏதுவாகிய பரந்து பட்டுச்‌ செல்வதோர்‌ ஓசை” எனப்‌ பேராஇரியர்‌ கூறும்‌ விளக்கத்தால்‌ அறிந்து கொள்ளலாம்‌.

இயற்றமிழ்ப்பா இசைப்பாவும்‌ ஆமோ எனின்‌, “பல இயற்பாக்‌ களுடனே நிறத்தை இசைத்தலால்‌ இசை என்று பெயராம்‌” எனவரும்‌ அடியார்க்கு நல்லாருரை இதனைத்‌ தெளிவிக்கும்‌ (இலப்‌. அரங்‌. 26). நிறமாவது இசை.