பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழிசை இயக்கம்‌ எத்துணையோ பரிபாடல்‌ எனத்தலைச்சங்க நூலாகச்‌ சுட்டப்‌ படும்‌ பரிபாடல்‌ நமக்குக்‌ இட்டவில்லை. கடைச்‌ சங்கநூல்களுள்‌ ஒன்றாகிய பரிபாடல்‌ இடைத்துள்ளது. எனினும்‌ எழுபது பரிபாடல்‌ என்பவற்றுள்‌ கிடைத்தவை “இருபத்து இரண்டே. இக்‌ இடைத்த பகுதியாலும்‌ பரிபா இசை வகுத்துப்‌ பண்ணொடு பாடப்பட்ட பா என்பது வெளிப்படுகின்றது. பரிதல்‌ என்பது ஓடுதல்‌, விரைந்தோடுதல்‌ என்னும்‌ பொரு ஞளுடையது. குதிரையோட்டம்‌, நீரோட்டம்‌, காற்றோட்டம்‌ என்பவை இடம்‌ காலம்‌ சூழல்‌ ஆகியவற்றுக்குத்‌ தக்கவாறு நெட்டோட்டம்‌, சுழிப்போட்டம்‌, வளைவோட்டம்‌, நிமிர்வோட்டம்‌, தாழ்வோட்டம்‌, அசைநிலை முதலியவற்றைக்‌ கொள்ளல்‌ போல அடிவகையாலும்‌' இசைவகையாலும்‌ செல்லும்‌ பா. பரிபா என்பது தெளிவாடின்றது. அருவி *கல்‌"லெனக்‌ கரைந்து வீழும்‌ வீழ்ச்சியும்‌ “ஒல்‌' லெனத்‌ தவழும்‌ தவழ்ச்சியும்‌, மெல்லெனச்‌ செல்லும்‌ செலவும்‌, அகன்று விரியும்‌ அகற்௫ியும்‌, குறுகி ஒடுங்கு விரையும்‌ விரைச்‌இயும்‌ அறிவார்‌ பரிபாடல்‌ நடையைப்‌ புரிவார்‌. இடைத்த பரிபாடல்களுள்‌ இரண்டாவது முதலிய பதினொரு பாடல்களின பண்‌ பாலையாழ்‌ என்றும்‌, பதின்மூன்றாவது முதல்‌ ஐந்து பாடல்களின்‌ பண்‌ நோதுறம்‌ என்றும்‌, பதினெட்டாம்‌ பாடல்‌ முதல்‌ நான்கு பாடல்களின்‌ பண்‌ காந்தாரம்‌ என்றும்‌ அறிய வருகின்றன. இவற்றால்‌ பண்முறையில்‌ தொகுக்கப்பட்ட இசைநூல்‌ இஃதென்பது தெளிவாகும்‌. இப்பரிபாடல்களுக்கு இசை வகுத்தோர்‌ இவர்‌ என்னும்‌ குறிப்பும்‌ உள்ளது. அவர்கள்‌ கண்ணகனார்‌, கண்ணாகளார்‌, கேசவனார்‌, நல்லச்சுதனார்‌. நன்னாகனார்‌, நாகனார்‌, பித்தாமத்தர்‌, பெட்ட னாகனார்‌, மருத்துவன்‌ நல்லச்சுதனார்‌ என்பார்‌. நந்நாகனார்‌, நன்னாகனார்‌ என்றும்‌ இரு பெயர்கள்‌ (2, 12) நன்னாகனார்‌ என்பதே ஆகலாம்‌. கேசவனார்‌ தாம்‌ பாடிய பாடலுக்குத்‌ தாமே இசையும்‌ வகுத்துள்ளார்‌ (14). நல்லச்சுதனார்‌ தாம்‌ பாடல்‌ பாடியதுடன்‌ நல்லழு௫ியார்‌ குன்றம்‌ பூதனார்‌ பாடல்களுக்கு இசையும்‌ வகுத்துள்ளார்‌ (16 — 18). நல்லச்சுதனார்‌ பாட்டுக்கோ, கண்ணகனார்‌ இசை வகுத்துள்ளார்‌.