பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ததும்பி வழிந்த தமிழிசை 13 பெற்றமை இவர்தம்‌ இசைப்புலமைச்‌ சான்றாம்‌. இவரைச்‌ சுட்டும்‌ உரையூரியர்‌ பின்னர்த்‌ தூரார்‌, 'இவர்‌ இனிய குரலொடு பாடவல்ல ராதல்‌ பற்றி இவ்வடை மொழி கொடுக்கப்பட்டார்‌ போலும்‌ என்றார்‌. "டண்‌' என்பது பண்ணப்படுவது:; இசைகூட்டப்படுவது. “பண்‌ என்னாம்‌ பாடற்கு இயைபின்றேல்‌” என்னும்‌ குறள்‌ இதன்‌ பொருளைத்‌ தெளிவிக்கும்‌. புமாளனாகிய ஒரு வள்ளலின்‌ பெயர்‌ பண்ணன்‌ என்பது. இசைவல்ல சங்கப்புலவர்‌ ஒருவர்‌ பெயர்‌ நப்பண்ணனார்‌. முன்னவன்‌ பாடுபெறு புகழாளன்‌; பின்னவர்‌ பாடிபுகழாளர்‌. முன்னவன்‌ பெருமை சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சி௰ கள்ளிவளவனால்‌ பெரிதும்‌ போற்றப்படும்‌. பின்னவர்‌ பெருமை பரிபாடலில்‌ விளங்கும்‌. பல்வகை இசைக்‌ கருவிகளுக்கும்‌ அமைந்த பொதுமைப்‌ பெயர்‌ “பல்லியம்‌ "என்பது. பல இயம்‌ -- பல்லியம்‌. நெடும்‌ பல்லியத்தனார்‌ என்னும்‌ ஆண்பாற்‌ புலவர்‌ ஒருவரும்‌ நெடும்‌ பல்லியத்தை என்னும்‌ பெண்பாற்‌ புலவர்‌ ஒருவரும்‌ சங்கப்‌ புலவர்‌ . வரிசையுள்‌ இடம்‌ பெறுகின்றனர்‌. முன்னவர்‌ புறம்‌ 64 ஆம்‌ பாடலைப்‌ பாடியவர்‌, குறுந்தொகை 203 ஆம்‌ பாடலும்‌ இவர்‌ பாடியதே. பின்னவர்‌ குறுந்தொகை 178 ஆம்‌ பாடலைப்‌ பாடியவர்‌. முன்னவர்‌, "நல்யாழ்‌ ஆகுளி பதலையொடு சுருக்கிச்‌ செல்லா மோதல்‌ சல்வளை விறலி” என விறலியாற்றுப்படை பாடுகின்றார்‌. யாழ்‌, ஆகுளி, பதலை எனப்‌ பல்வகை இசைக்கருவிகள்‌ இடம்‌ பெறல்‌ காண்க (புறம்‌. 64). பின்னவரை முன்னவரின்‌ உடன்‌ பிறந்தாரோ என ஊக்கப்படுகிறார்‌ என்பார்‌, பெரும்‌ பேராசிரியர்‌ உ.வே. சாமிநாதர்‌. சங்கப்புலவர்‌ வரிசையுள்‌ இடம்‌ பெறுவாருள்‌ ஒருவர்‌ ஆரிய வரசன்‌ யாழ்ப்‌ பிரமதத்தனார்‌ என்பார்‌. இவர்‌ பாடியது குறுந்தொகை செய்‌. 184. இவர்‌ பெயரில்‌ உள்ள *யாழ்‌* இவர்‌ தமிழிசைப்‌ புலமையைப்‌ புலப்படுத்துவதாம்‌. ஆரிய அரசன்‌ முத்தமிழ்‌ அறிய விழைந்ததும்‌, அம்புலமை பெற்றதும்‌, பத்துப்பாட்டில்‌ எட்டாவதாம்‌ குறிஞ்சிப்‌ பாட்டின்‌ உரைநிறைவில்‌ “ஆரிய வரசன்‌ பிரகத்தனைத்‌ தமிழ்‌ அறிவித்தற்குக்‌ கபிலர்‌ பாடிய குறிஞ்சிப்பாட்டிறகு மதுரை