பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 4. தமிழிசை வெள்ளம்‌ ப குமிழிசை வெள்ளமெனப்‌ பெருக்கெடுத்ததை அறிய வேண்டுமா? பல நூல்களைத்‌ தேடி அலைதல்‌ வேண்டா. ஆழ்ந்து நின்று இலப்படுகார நூலையும்‌ அரும்பத உரைகாரர்‌ அடியார்க்கு நல்லார்‌ உரைகளையும்‌ கற்றாலே போதும்‌. அப்‌ பழந்தமிழிசையின்‌ தடத்தை முழுமையாகக்‌ கண்டறிய முடியாத நிலைமை ஒன்று இருப்பினும்‌, தமிழிசைப்‌ பெருக்கை மாறுபட்டாரும்‌ மதஇத்துப்‌ போற்றும்‌ அளவுக்குக்‌ காட்டுகின்றவை அவை. “சலப்பதிகாரத்து இசைத்தமிழ்‌, இலப்பஇிகாரத்தூ இசை நுணுக்க விளக்கம்‌, இலப்படுகாரத்தில்‌ யாழும்‌ இசையும்‌, இலப்பதிகாரச்‌ செங்கோட்டு யாழ்‌” என்பனவாகப்‌ பல நூல்கள்‌ வெளிவந்துள. வெளிவந்து கொண்டும்‌ உள்ளன. ஆகலின்‌ அவற்றைக்‌ கண்டு கொள்வாராக. இவண்‌ குறிப்புகளாகச்‌ சில செய்திகளை அறிதல்‌ போதும்‌. இலப்பதிகாரத்தில்‌ இடம்‌ பெற்றுள்ள இசை (வரி)ப்‌ பாடல்கள்‌: அம்மானை வரி ஆற்றுவரி வாழ்த்துவரி ஊாசல்வரி வேட்டுவவரி ஊர்குழ்வரி ஆய்ச்சியர்‌ குரவை கந்துகவரி குன்றக்‌ குரவை கானல்வரி மங்கல வாழ்த்துப்பாட்டு சாயல்வரி வள்ளைப்பாட்டு. சார்த்துவரி இணைநிலைவரி நிலைவரி மயங்கு இணை நிலைவரி முகமில்வரி முரிவரி