பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழிசை இயக்கம்‌ செம்பகை - பண்ணோடு உளராமை. ஆர்ப்பு - ஓங்க இசைத்தல்‌. அதிர்வு - நரம்பைச்‌ சிதற உந்தல்‌ கூடம்‌ - தன்‌ பகையாகிய ஆறாம்‌ நரம்பின்‌ இசையிற்‌ குறைந்து தன்‌ ஓசை மழுங்கல்‌. இயக்கு என்பது நடை. அது கால அளவு, தாளம்‌ எனப்படும்‌. இது முதல்‌ நடை, வாரம்‌, கூடை, திரள்‌ என்னும்‌ நால்வகைப்‌ பட்டதாகும்‌. முதல்நடை என்பது, மிகுந்த காலச்‌ செலவுடைய மந்தநடை. வாரநடை என்பது, முதல்‌ நடையில்‌ சற்றே காலம்‌ குறைந்த செலவுடைய ூறிது முடுகுநடை. கூடை நடை என்பது, வாரநடையினும்‌ குறைந்த காலச்‌ செலவுடைய சற்றே விரைந்த முடுகு நடை. திரள்‌ நடை என்பது, கூடை நடையினும்‌ குறைந்த காலச்‌ செலவுடைய மிகு முடுகு நடை (இலம்பு 3:67). இவற்றை வடமொழியில்‌ முறையே விளம்ப காலம்‌, மத்திம காலம்‌, துரித காலம்‌, அஇதுரித காலம்‌ என்பர்‌. ஐவகை இசைக்‌ கருவிகள்‌: தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்‌ கருவி, கஞ்ச (உலோக)க்‌ கருவி, மிடற்று (கழுத்து)க்‌ கருவி. தோற்கருவிகள்‌: பேரிகை, படகம்‌, இடக்கை, உடுக்கை, மத்தளம்‌, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம்‌, தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம்‌, மொந்தை, முரசு. தூம்பு, நிசாளம்‌, துடுமை, சிறுபறை, அடக்கம்‌, தரூணிச்சம்‌, விரலேறு, பாகம்‌, உபாங்கம்‌, நாழிகைப்பறை, துடி, பெரும்பறை (இலம்பு. 3: 27. அடியார்க்‌) இவையெல்லாம்‌ சிலம்பு வழியாக அறியப்‌ பெறும்‌ இல குறிப்புகள்‌ . பிறவற்றை அறிய விரும்புவார்‌ ஆங்குக்‌ கண்டு கொள்க. இனிப்‌ பெருங்கதை என்னும்‌ பெருநூல்‌ தலைவன்‌ உதயணன்‌ என்பான்‌. அவன்‌ பிரமசுந்தர முனிவர்‌ என்பாரிடம்‌ யாழிசை கற்றுத்‌