பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிசை வெள்ளம்‌ 21 தேர்ந்தான்‌. அம்முனிவர்‌ யானை முதலியவற்றை வயமாக்கத்‌ தக்க. கோடபதுி என்னும்‌ பெயரிய யாழைப்‌ பரிசாக வழங்கினார்‌. உஞ்சை வேந்தன்‌ பிரச்சோதனனால்‌ சிறைப்பட்ட உதயணன்‌, வேந்தன்‌ மகள்‌ வாசவதத்தைக்கே யாழ்‌ கற்பிக்கும்‌ அ௫ரியனாக விளங்குகின்றான்‌. அதற்குரிய சூழல்‌ ஒன்று அவன்‌ றையில்‌ இருந்தபோதே நிகழ்கின்றது. அரசயானை மதங்கொள்கின்றது. அடக்குவாரற்று அழிசெயல்‌ செய்கின்றது; ஊரே அலமருகின்றது. அந்நிலையில்‌ உதயணனே அதனை அடக்கத்‌ தக்கான்‌ என்பதை அறிந்த வேந்தன்‌ விருப்பப்‌ படியே உதயணன்‌, "வீணை எழீஇ வீதியின்‌ நடப்ப ஆணை ஆசாற்‌ கடியுறை செய்யும்‌ மாணி போல மதக்களிறு” படிகிறது. பெருங்கதை (2.9.57--59) ஏந்தாமணியின்‌ பாட்டுடைத்‌ தலைவன்‌ €வகன்‌$? அவன்‌ யாழிசை வல்லானாகப்‌ படைக்கப்‌ பட்டுள்ளான்‌. யாழில்‌ வெல்ல வல்லவரே காந்தருவ தத்தையாரை மணங்‌ கொள்ள முடியும்‌ என ஓர்‌ இசைப்‌ போட்டி எழுந்தது. அப்போட்டியில்‌ பலரும்‌ தோற்க, Fara போட்டியில்‌ தலைப்பட்டான்‌. அவனிடம்‌ மீட்டுதற்காகத்‌ தரப்பட்ட யாழ்களைக்‌ கையில்‌ எடுத்த எடுத்த அளவில்‌, “இந்த மரம்‌ மெலியது, *இந்த மரம்‌ அழுகியது', *இந்த மரம்‌ வடுவுற்றது', “இந்த மரம்‌ இடியுண்டது', “இந்த மரம்‌ ஏிறப்பற்றது”, “இம்‌ மரம்‌ வெந்தது' என யாழ்‌ செய்யப்‌ பட்ட மரங்களின்‌ குறைபாடு களை எடுத்துரைத்து ஒவ்வொன்றாக ஒதுக்கிச்‌ சரியானதொன்றைத்‌ தேர்ந்தெடுத்தான்‌. யாழின்‌ நரம்புக்‌ குறை இவை இவை என விரியக்‌ கூறிய சீவகன்‌, ஒரு நரம்பைப்‌ பிரித்து அதன்‌ ஊடு புகுந்திருந்த மயிர்‌ ஒன்றினைச்‌ சுட்டிக்காட்டி ஒதுக்கினான்‌. பின்னர்த்‌ தன்‌ யாழிசையால்‌ காந்தருவ தத்தையை வென்று மணம்‌ கொண்டான்‌. ஆடவர்‌ எவரும்‌ தன்‌ வீட்டின்‌ அருகில்‌ வந்தார்‌ எனினும்‌ அவர்‌ பெயரை ஒருவர்‌ விரும்பிச்‌ சொன்னார்‌ எனினும்‌ உயிரை விடுவேன்‌ என்னும்‌ உறுடுயில்‌ இருந்தவராகிய ௬ரமஞ்சரியார்‌ என்பாரைச்‌ €வகன்‌ பெருமூதாளனாம்‌ வடிவில்‌ சென்று இசையால்‌ வென்று மணங்கொண்ட செய்தியே சுரமஞ்சரியார்‌ இலம்பகமாகும்‌.