பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிசைக்‌ கலைவளம்‌ 27 இக்கல்வெட்டின்‌ முலம்‌ தெளிவாகும்‌” என்பர்‌ (கல்வெட்டு ஓர்‌ அறிமுகம்‌. 75; குடுமியான்மலை. 92). இருமெய்யம்‌, மலையடிப்பட்டி இசைக்கல்வெட்டுகளும்‌, குடுமியான்‌ மலை இசைக்கல்வெட்டும்‌ இ.பி. 7ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்தன என்பர்‌. மூன்றையுமே மகேந்திரவர்மன்‌ உருவாக்கம்‌ புரிந்தான்‌ என்றும்‌ கூறுவர்‌. வேறு வேறு என்பாரும்‌ உளர்‌. இக்கல்வெட்டை விபுலானந்த அடிகள்‌, "சார்ங்க தேவர்‌ சொல்லுகின்ற சுத்தவுருவம்‌, காகலியோடு கூடிய உருவம்‌, அந்தரத்தோடு கூடிய உருவம்‌, காகலி அந்தரத்தோடு கூடிய உருவம்‌ என்னும்‌ நான்கினுள்‌ காகலியோடு கூடிய உருவம்‌ இக்கல்வெட்டில்‌ கொள்ளப்பட்டிலதாதலின்‌, கல்வெட்டினைப்‌ பொறித்த ஆஇிரியர்‌ முற்றிலும்‌ பழந்தமிழ்‌ மரபினைக்‌ கையாள்‌ கறார்‌ என்பது தெளிவாகிறது” என்கிறார்‌ (யாழ்‌ நூல்‌. 339) இசைக்கலை பற்றிய இக்கல்வெட்டு வடமொழியிலே உள்ளது. இதனை ஆராயும்‌ அறிஞர்‌ மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்‌. *வடமொழியிலே எழுதப்பட்டிருப்பதனாலே இந்தச்‌ சாசனம்‌ கூறும்‌ விசயம்‌ தமிழ்நாட்டு இசையன்று என்று கருதக்கூடாது. தமிழ்‌ நாட்டில்‌ வழங்கிய இசையைத்தான்‌ இந்தச்‌ சாசனம்‌ வடமொழியில்‌ கூறுகிறது. வடமொழியில்‌ சங்கே நூல்கள்‌ எழுதப்பட்டிருப்பத னாலே அவை தமிழ்நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழி சங்தே நூல்களில்‌ பலவும்‌ தமிழ்நாட்டு இசையைத்தான்‌ கூறுகின்றன” என்கிறார்‌ (தமிழர்‌ வளர்த்த அழகுக்கலைகள்‌. 92 - 93). இக்கல்வெட்டின்‌ நிறைவில்‌ "எட்டிற்கும்‌ ஏழிற்கும்‌ இவை உரிய” என்று தமிழில்‌ எழுதப்பட்டூள்ளது என்றும்‌ ஏழு நரம்புள்ள வீணையிலும்‌ எட்டு நரம்புள்ள வீணையிலும்‌ இதில்‌ சொல்லப்பட்ட இசை வா௫த்தற்குரியது என்றும்‌ கூறுவர்‌. இதனை மறுத்து வேறு கூறுவாரும்‌ உளர்‌ என்பர்‌ (குடுமியான்‌ மலை) 100. இசைத்தாண்கள்‌: தமிழ்‌ நாட்டில்‌ இசைத்தூண்கள்‌ சல இடங்களில்‌ உள்ளன. மதுரை மீனாட்சியம்மன்‌ இருக்கோயில்‌ வடக்குக்‌ கோபுர உள்வாய்ப்‌ பகுஇயில்‌ ஐந்து தூண்கள்‌ உள்ளன. ஒருதூணில்‌ 22 மெல்லிய தூண்கள்‌ உள்ளன. அவற்றை மெல்லெனத்‌ தட்ட