பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழிசை இயக்கம்‌ இருநேரிசை, இருவிருத்தம்‌, இருக்குறுந்தொகை, இருத்‌ தாண்டகம்‌ என்பனவும்‌ இசைப்பாடல்களே. இவற்றை அப்பரடிகள்‌ மட்டுமே பாடியுள்ளார்‌. நாலடி, ஈரடி, இருமுக்கால்‌, திருவிராகம்‌, இருவிருக்குக்குறள்‌, யாழ்முரி, இருத்தாளச்சஇி, இருவியமகம்‌ முதலியன பண்ணால்‌ வந்த பெயர்கள்‌ அல்ல என்றும்‌, இருவிராகம்‌ என்பது இந்தளம்‌, சாதாரி, நட்டபாடை முதலியன பண்‌ அமைந்த தஇிருப்பதிகங்களிலே ல முடுகசையாக உள்ளவற்றிற்குப்‌ பெயராகி வருவன என்றும்‌ கூறுவர்‌. சைவ மடங்களில்‌ ஓதப்படும்‌ பண்கள்‌ 21 என்றும்‌, அவற்றை ஓதும்‌ காலவரையறை ஈதெனவும்‌ மரபுவழிக்‌ கொள்வர்‌. அது வருமாறு: 1. புறநீர்மை, 3. காந்தாரம்‌; பியந்தைக்‌ காந்தாரம்‌, 3. கெளிகம்‌, 4. இந்தளம்‌; இருக்குறுந்தொகை, 5. தக்கேசி, 6. நட்டராகம்‌: சாதாரி 7. நட்டபாடை 8. பழம்பஞ்சுரம்‌ 9. காந்தார பஞ்சமம்‌ 10. பஞ்சமம்‌. இப்பத்து வரிசைகளில்‌ உள்ளவை பகற்காலத்தில்‌ ஒதும்‌ பண்கள்‌. இப்பண்களைப்‌ பகல்‌ 3 நாழிகையில்‌ இருந்து மும்மூன்று நாழிகையாக ஒவ்வொரு வகைக்கும்‌ முறையே மேலேற்றி ஒதுதல்‌ இவற்றின்‌ காலவரையறையாகும்‌. 1. தக்கராகம்‌ 2: பழந்தக்கராகம்‌ 3. கோமரம்‌ 4. கொல்லி; கொல்லிக்‌ கெளவாணம்‌ இருநேரிசை இருவிருத்தம்‌. 5. வியாழக்‌ குறிஞ்சி 6. மேகராகக்‌ குறிஞ்சி 7. குறிஞ்சி 8. அந்தாளிக்‌ குறிஞ்சி இவ்வெட்டு வரிசைகளில்‌ உள்ளவை இரவுக்‌ காலத்தில்‌ ஒதும்‌ பண்கள்‌. இப்பண்களை இரவு மூன்றே முக்கால்‌ நாழிகையில்‌ இருந்து மூன்றேமுக்கால்‌ மூன்றேமுக்கால்‌ நாழிகையாக ஒவ்வொரு வகைக்கும்‌ மேலேற்றி ஒதுதல்‌ காலவரையறையாகும்‌. 1. செவ்வழி 2. செந்துருத்தி 3. இருத்தாண்டகம்‌ இம்மூன்று வரிசைகளில்‌ உள்ளவை பகல்‌, இரவு எக்காலமும்‌ பொதுவாக ஓதும்‌ பொதுப்‌ பண்களாகும்‌. இவற்றிற்குக்‌ காலவரையறை இல்லை. பகற்பண்‌ 10; இரவுப்பண்‌ 9; பொதுப்பண்‌ 3. ஆகப்பண்‌ 21. * திருஞானசம்பந்தர்‌ தேவாரம்‌ வெளியீடு? இருப்பனந்தாள்‌ - தேவாரப்‌ பண்கள்‌