பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிசைக்‌ கலைவளம்‌ 31 நாயன்மார்களுக்குப்‌ பின்னே தமிழிசைப்‌ பாக்கள்‌ பாடிய பெருமக்கள்‌ பலர்‌ இருந்துளர்‌. அவருள்‌ ஒன்பதின்மர்‌ பாடிய பாடல்கள்‌ பதினோராந்‌ திருமுறையில்‌ இடம்‌ பெற்றுள. அப்பாடல்‌ களின்‌ பெயரே *இருவிசைப்பா! என்பதால்‌ அதன்‌ இசைநலம்‌ இனிது விளங்கும்‌. அவ்வொன்பதின்மரும்‌, இருமாளிகைத்‌ தேவர்‌, சேந்தனார்‌, கருவூர்த்‌ தேவர்‌, பூந்துருத்தி, நம்பிகாடநம்பி, கண்டராதித்தர்‌, வேணாட்டடிகள்‌, இருவாலி அமுதனார்‌, புருடோத்தம நம்பி, சேதிராயர்‌ என்பார்‌. மூவர்‌ முதலிகளுக்கும்‌ முற்பட்டவராம்‌ காரைக்காலம்மையார்‌ பாடல்கள்‌ இசைவளம்‌ பயின்று பண்ணோடு இசைக்கும்‌ பாடல்‌ களாக இலங்கியவையாம்‌, இனி, ஆழ்வார்‌ பாடல்களும்‌ அவ்விசை வழிப்பட்ட பாடல்களே என்பதையும்‌ அவற்றின்‌ பண்குறிப்புகளால் அறியலாம்‌. “திருப்பாணாழ்வார்‌? என்பது ஒர்‌ ஆழ்வார்‌ பெயரே அன்றோ! இருவாய்‌ மொழியால்‌ அறியப்படும்‌ பண்கள்‌ இந்தளம்‌ ட டட காந்தாரம்‌ நட்டராகம்‌ குறிஞ்சி நாட்டம்‌ கொல்லி பரமம்‌ கெள௫கம்‌ பழந்தக்கராகம்‌ சீகாமரம்‌ பழம்பஞ்சுரம்‌ செருந்தி பாலையாழ்‌ தக்கராகம்‌ புறநீர்மை தக்கேடு முதிர்ந்த குறிஞ்சி நட்டபாடை முதிர்ந்த இந்தளம்‌ வியந்தம்‌ பிங்கலந்தை நிகண்டால்‌ அறியப்படும்‌ பண்கள்‌: 103 அவற்றை அங்குக்‌ கண்டு கொள்க