பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காரிருள்‌ மூட்டம்‌ Z இசைத்‌ தமிழ்ப்‌ பாகுபாடு இருந்தும்‌, பண்சுமந்த பாடல்கள்‌ அமைந்தும்‌, தமிழிசை ததும்பி வழிந்தும்‌, வெள்ளப்பெருக்காய்ப்‌ பெருகியும்‌, கலைவளம்‌ சுரந்தும்‌ - இருப்பினும்‌, *தமிழிசை என ஒன்று இல்லை' என்றும்‌, 'இருப்பனவெல்லாம்‌ வேற்றிசையே” என்றும்‌, *தமிழ்ப்பாட்டு இசைப்பின்‌ மேடையே ட்டுூப்பட்டுப்‌ போகும்‌” என்றும்‌, “அப்படியே ஓரிரு தமிழ்ப்‌ பாடல்கள்‌ பாட வேண்டும்‌. எனினும்‌ அவற்றைத்‌ :”துக்கடாப்பாட்டு' என்றும்‌ “சில்லறை! என்றும்‌, “உருப்படி என்றும்‌ தமிழ்‌ நாட்டில்‌ இருந்து கொண்டு தமிழ்‌ மண்ணின்‌ வளத்தைத்‌ துய்த்துக்‌ கொண்டு தமிழ்க்கேடு செய்தாரின்‌ தந்நலச்‌ செயலின்‌ விளைவால்‌ ஏற்பட்டதே இக்காரிருள்‌ மூட்டமாம்‌. தமிழிசை கொழித்த மண்ணில்‌ கருநாடக இசையே இசையாகிய தென்ன? என்னும்‌ வினா பலர்க்கும்‌ தோன்றலாம்‌. இருமறைக்காடு இடமும்‌ பெயரும்‌ மாறாமலே வேதாரணியமாக விளங்குவது நாம்‌ அறியாததா? இருமறைக்காடும்‌ வேதாரணியமும்‌ வெவ்வேறு ஊர்களா? இன்று இருமறைக்காடு என்றால்‌ அது எங்கே உள்ளது என்று கேட்பாரும்‌ இலரா? மயிலாடுதுறை, மாயூரமாகி, மீண்டும்‌ மயிலாடூதுறையாக ஊரறிய வாய்த்திருப்பது நாடறி செய்திதானே! இப்படி ஏற்பட்டதே கருநாடக இசை என்பதாம்‌. தமிழிசை வேறு, கருநாடக இசை வேறு இல்லை; தமிழிசையே கருநாடக இசை எனப்பெயர்‌ கொண்டு உலவு௫றதாம்‌. இதன்‌ வரலாற்றுப்‌ பின்னணி என்ன? பன்னிரண்டாம்‌ நூற்றாண்டில்‌ சோமேசுவர புல்லோகமால்‌ (1116-1127) என்ற குறுநில மன்னன்‌ ஆண்டு கொண்டிருந்தான்‌. அவனுடைய நாடு மகாராட்டிரம்‌. அவன்‌ இசையில்‌ ஈடுபாடு கொண்டவன்‌. “மானச உல்லாசம்‌' என்ற இறந்த நூல்‌ செய்தவன்‌. தென்னிந்திய சங்தேத்துல்‌ ஈடுபட்டு இது தன்னாட்டுக்குத்‌ தேற்கே காணப்பட்டமையாலும்‌ அடுத்துள்ள தென்னிந்திய நாடு கருநாடக மானமையாலும்‌ தான்கண்டு போற்றிய இச்சங்கதத்திற்குக்‌ *கர்நாடக சங்கேம்‌* என்று பெயர்‌ வைத்தான்‌. அக்காலத்தில்‌ தெற்கே இருந்த S.k.