பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் இன்பம்


அகழியும், உயர்ந்த மதிலும், நிறைந்த ஞாயிலும், செறிந்த காடும் அக்கோட்டையின் உறுப்புக்கள்.

கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேர்எயில்”

என்று அதன் பெருமையைப் பாடினார் ஐயூர் மூலங்கிழார். எயில் என்பது கோட்டை. கானப்பேர் எயில், வேங்கை மார்பன் என்ற வீரனுக்குரியதாக இருந்தது. அக்கோட்டையைத் தாக்கி வேங்கையை வென்றான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, அவ்வெற்றியின் காரணமாகக் "கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்று பாராட்டப்பெற்றான். இந்நாளில் கானப்பேர் என்பது காளையார் கோவில் என வழங்குகின்றது.

கானப்பேர் எயிலுக்கு அருகே ஏழெயில் என்ற கோட்டையும் இருந்ததாகத் தெரிகிறது. ஒருகால் அக்கோட்டையைக் கைப்பற்றினான் நலங்கிள்ளி என்ற சோழன்.

தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை”

என்று கோவூர் கிழார் அவனைப் புகழ்ந்துள்ளார். இக்காலத்தில் 'ஏழு பொன் கோட்டை' என வழங்கும் ஊரே பழைய ஏழெயில் என்று கருதப்படுகின்றது.

தொண்டை நாட்டில் முற்காலத்திருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக்கோட்டத்தைச் சேர்ந்ததே காஞ்சி மாநகரம். எயிற்பதி என்று அந்நகரைச்