இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200
தமிழ் இன்பம்
தேவி அழியாத பத்தினரி” என்று புகழப்படும் பாஞ்சாலியாயினாள். பாஞ்சாலி யானாலும் பராசக்தியின் அருள் குன்றாது அம்மலையில் நின்று நிலவுகின்றது. இத்தகைய அரும் பெருங் கருணையே அறிந்தன்றோ.
"வெறுப்பவே செய்யும் என்சிறு மையைதின் பெருமையினால்
பொறுப்பவனே.”
என்று மனம் நெகிழ்ந்து பாடினார் மாணிக்க வாசகர்!